வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மோசமான மனநிலையில் சங்கர்.. கோடிக்கணக்கில் நஷ்டத்தை பார்த்தும் யோசிக்காமல் செய்யும் வேலை

தனது பிரம்மாண்ட இயக்கத்தின் மூலம் பல படைப்புகளை தந்தவர் ஷங்கர். மேலும் ஒரு பாடலுக்கு கூட பல கோடிகள் செலவு செய்து பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என மெனக்கெடுவார். ஆனால் ஷங்கர் கோடிகளில் செலவு செய்து படப்பிடிப்பை சர்வ சாதாரணமாக நிறுத்திவிடுவார். இதனால் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.

ஷங்கருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இவரின் இளைய மகளான அதிதி ஷங்கர் தற்போது முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படம்.

இதை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், ரோஹித்துக்கும் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அந்தச் சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கு பெற்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு மே 1ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ஷங்கர். மேலும் எப்போதும் போல இதிலும் பிரமாண்டத்தை காட்டியிருந்தார்.

அதாவது இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுமார் 1500 பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையின் விலை 9000. பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த வரவேற்பு அரங்கை பிரமாண்டமாக அமைத்திருந்தார். இதற்கு மட்டும் 6 கோடி செலவு ஆனதாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக வரவேற்பு நிகழ்ச்சியில் தேதியை மாற்றி உள்ளார்.

கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டால் தற்போது தேதியை மாற்றி உள்ளதால் ஷங்கருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கும். மேலும் இதற்கு பல தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சல் தான் காரணம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் ஷங்கர் தற்போது ஏற்பாடு செய்ததை விட மிகப்பிரமாண்டமாக வேறு ஒரு தேதியில் மகளின் வரவேற்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News