தமிழில் அடுத்தடுத்து வெளியாகும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் தியேட்டருக்கு வருகின்றனர். ஆனால் சில திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி வருகிறது.
இதனால் தற்போது ரசிகர்கள் பலரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் மனநிலையில் இல்லாமல் இருக்கிறார்கள். தேவையில்லாமல் முதல் நாள், முதல் காட்சிக்கு ஏகப்பட்ட பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி, கடைசியில் படத்தை பார்த்து வெறுத்துப்போன ரசிகர்கள் தற்போது தமிழ் படங்களை பார்த்தாலே அலறும் நிலைக்கு வந்து விட்டனர்.
அதனால் தற்போது வெளியாக இருக்கும் நம்பர் நடிகையின் திரைப்படத்தை பார்ப்பதற்கும் ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் படத்தை தயாரித்த நடிகையே பிரமோஷன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யாமல் படத்தை ரிலீஸ் செய்யும் போது, நாம் ஏன் காசு செலவு பண்ணி படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர்.
மேலும் திரைப்படத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் நடிகையும், அவரின் காதலரும் பிரமோஷன் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக காத்துவாக்கில் பேசப்பட்டு வருகிறது. இப்படி அவர்களுக்கே ஆர்வம் இல்லாத போது ரசிகர்கள் மட்டும் ஆர்வம் காட்டுவார்களா என்ன.
அதோடு படத்தின் ஹீரோ கடைசியாக நடித்த சில திரைப்படங்களும் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் கடைசியாக நம்பர் நடிகை தயாரித்து, நடித்திருந்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதனால்தான் தற்போது படத்திற்கான டிக்கெட் புக்கிங் கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லையாம்.
இருந்தாலும் இயக்குனர் படத்தின் முதல் காட்சியை பார்த்துவிட்டு எப்படியும் பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் வரும் என்று அதிக நம்பிக்கையில் இருக்கிறாராம். அதைக்கேட்டு எப்படியும் ரசிகர்கள் படத்தைப் பார்க்கக் கூடி விடுவார்கள் என்று அவர் மனக்கணக்கு போட்டு வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.