செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

விஜய்க்காகவே செதுக்கிய தளபதி-66.. இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு கதை

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தமிழ் தெலுங்கு என இரு மொழி படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிப்பள்ளியுடன் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் படம் முறையான பூஜை விழாவுடன் சில நாட்களுக்கு முன் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பை டீம் சென்னையில் ஒரு சிறிய ஷெட்யூலில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழி ரசிகர்களையும் கவரும் இந்த முனைப்பில் படக்குழு மும்முரமாக செயல் பட்டு வருகிறது.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்திலிருந்து வெளியான சமீபத்திய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இப்போது, ‘தளபதி 66′ படத்தில் விஜய்க்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்காது என கூறப்பட்டு வருகிறது. குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த படம், விஜய் அவரது 90களின் நடித்த படங்களை போலவே தோன்றுவார் என கூறப்பட்டு வருகிறது. ஒரு சில திரைப்பட தயாரிப்பாளர்கள் விஜய் போன்ற ஒரு நடிகருடன் பணிபுரியும் போது ஆக்ஷன் காட்சிகளை வைக்க விரும்புவார்கள்.

ஆனால் வம்ஷி பைடிப்பள்ளி தனது முந்தைய பட சாயலில் படத்தை தயாரிக்க எடுக்க முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் விஜய்க்கு ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. படத்திற்கான அனைத்து டெக்னிஷியன்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், படத்திற்கான ஸ்டண்ட் மாஸ்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால் கூறப்படுவது போல படத்தில் சண்டை காட்சிகள் இல்லை என உறுதி படுத்தும் வகையிலுள்ளது.

தளபதி 66’ படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் முடித்த கையோடு, 3வது கட்ட படப்பிடிப்பபை அடுத்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் தொடங்கவுள்ளனர். மேலும் இந்த படப்பிடிப்பில் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தில் சரத்குமார், ஷாம் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தமன் ஏற்கனவே படத்திற்காக பாடல்களை இசையமைக்கத் தொடங்கியுள்ளார். ஹைதராபாத்துக்குப் பிந்தைய ஷெட்யூலுக்காக சென்னையில் பிரமாண்ட செட் ஒன்றையும் உருவாக்கி வருகின்றனர். அந்த செட்டில் ஒரு பாடலை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News