7 வருடம் கழித்து பழைய அஸ்திரத்தை கையிலெடுக்கும் எஸ்ஜே சூர்யா.. ஜெர்மனியில் தயாராகும் கதாநாயகன்

இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த முதல் படத்திலேயே தல அஜித்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா. இதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்தப் படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா படத்தை இயக்கியும் நடிக்கவும் துவங்கினார். எனவே அவருடைய நடிப்பில் வியாபாரி, நியூ, இசை போன்ற திரைப்படங்கள் வெளிவந்தது. அதன் பிறகு ஸ்பைடர், மெர்சல் போன்ற படங்களில் மிரட்டும் வில்லனாக தோன்றி ரசிகர்களை அலற விட்டிருப்பார்.

இந்நிலையில் தற்போது எஸ் ஜே சூர்யா மீண்டும் மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் இயக்குகிறார். இந்த படத்தை இயக்கி இவரே நாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அவருக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகியை அறிமுகப்படுத்தப் போகிறார்.

அத்துடன் இந்த படத்தில் முக்கியமாக ஒரு காரை மையப்படுத்திய கதை அமைகிறது. அதனால் அந்தக் காரை ஜெர்மனியில் ஆடர் கொடுத்துள்ளார். முக்கியமாக கார் தான் கதாநாயகன் அந்த அளவிற்கு கதைக்கு முக்கியமான அந்த கார் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

மேலும் SJ சூர்யா கமிட்டாகி இருக்கும் இரண்டு, மூன்று படங்களை முடித்து விட்டு அடுத்ததாக இந்த படத்தை தொடங்குவார் என்று அறிவித்திருக்கிறார். படத்தின் பெயர் கில்லர் என்று கூறியிருக்கிறார்.

எனவே டைட்டிலை கேட்டால் படம் நிச்சயம் ஆக்சன் த்ரில்லர் படமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் இப்போதிலிருந்தே அந்தப் படத்தைக் குறித்து ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →