புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காதலருக்கு ஆப்பு வைத்த நம்பர் நடிகை.. பாவம் மனுஷனுக்கு நேரமே சரியில்லை போல

காதலரின் இயக்கத்தில் நம்பர் நடிகை நடித்துள்ள திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தப்படம் தற்போது வெளியான பிறகு காற்று போன பலூனாக மாறியுள்ளது. படத்தை பார்த்த பலரும் அதை கழுவி ஊற்றி வருகின்றனர்.

கஷ்டப்பட்டு இயக்கிய படம் இப்படி ஆயிடுச்சே என்று இயக்குனர் தன் நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். மேலும் காதலியின் போக்கும் தற்போது வித்தியாசமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இயக்குனர் தவித்து வருகிறாராம்.

ஏனென்றால் படத்தின் பிரமோஷன்களுக்குக் கூட நம்பர் நடிகை வரமாட்டேன் என்று ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டாராம். இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் நடிகை, காதலன் மேலிருந்த ஆத்திரத்தில் தான் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

அதற்கு காரணம் இயக்குனருக்கும், அந்த விவாகரத்து நடிகைக்கும் இடையே ஏற்பட்ட திடீர் நெருக்கம் தான் நடிகையை கொதிப்படைய வைத்துள்ளது. இதனால் கடுப்பான நடிகை காதலரிடம் சண்டை போட்டு பிரேக்கப் வரை சென்று இருக்கிறார்.

இதனால் மிரண்டு போன காதலர் எப்படியோ நடிகையை கெஞ்சி, கொஞ்சி சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் ஆத்திரம் தீராத நடிகை தற்போது காதலருக்கு ஒரு பெரிய ஆப்பு வைத்துள்ளார். அதாவது இயக்குனர் தற்போது அந்த பெரிய நடிகரை வைத்து படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தை மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படம் நன்றாக ரீச் ஆனால் நடிகரின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து விடும் என்ற கனவில் இருக்கிறார் அந்த இயக்குனர். ஆனால் அதற்கு பங்கம் வரும்படி ஒரு வேலையை செய்திருக்கிறார் நம்பர் நடிகை.

என்னவென்றால் இந்தப் படத்தில் தனக்கும், படத்தை இயக்கும் காதலருக்கும் ஆளுக்கு 10 கோடி சம்பளம் வேண்டும் என்று நடிகை தயாரிப்பு தரப்பிடம் கறாராக கூறி இருக்கிறார். இந்த விஷயம் நடிகரின் காதுக்கும் சென்றிருக்கிறது. அதனால் கோபமான நடிகர் இப்போது வெளியாகியிருக்கும் படம் நன்றாக ஓடினால் மேற்கொண்டு பேசலாம் என்று கூறிவிட்டாராம்.

இதனால் முதலுக்கே மோசம் வந்துவிட்டதே என்று இயக்குனர் தவித்து கொண்டிருக்கிறார். நடிகையால் தனது சினிமா வாழ்க்கையே அம்பேல் ஆகி விடும் என்றும் காதலர் புலம்பி வருகிறாராம்.

Trending News