விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற வெண்பாவை ஒரு வார்த்தை கூடக் கேட்காத பாரதிக்கு வெண்பா தாமாக போன் செய்கிறாள். ஆனால் அந்த போன் கண்ணம்மா கையில் இருப்பதால் அதை அட்டன் செய்த கண்ணம்மா வெண்பாவை வறுத்து எடுத்து விட்டாள்.
அத்துடன் சௌந்தர்யா, இரண்டு குழந்தைகள் மற்றும் பாரதி உள்ளிட்டோருடன் குடும்பமாக இருக்கும்போது ஏன் போன் செய்து டார்ச்சர் செய்கிறாய் என கண்டபடி திட்டி தீர்க்கிறார். மேலும் உன்னுடைய வாழ்க்கையை சரியாக வாழாமல் ஏன் அடுத்தவர் புருஷனுக்கு லோலோன அலையிற என கண்ணம்மா வெண்பாவில் வீடியோகால் வாயிலாக செஞ்சுவிட்டாள்.
எனவே வெண்பாவை திட்டித்தீர்த்த சந்தோசத்தில் இருந்த கண்ணம்மாவிற்கு, பாரதி அவள் மனம் புண்படும்படி கடுமையாக பேசிவிட்டான். ஏனென்றால் கூடிய விரைவில் பாரதி நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் விரைவில் உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என் கண்ணம்மாவிடம் பாரதி சந்தோசமாக சொல்கிறான்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை லஷ்மி மறைந்திருந்து கேட்கிறாள். ஒரே இடத்தில் அம்மாவும் அப்பாவும் வேலை செய்வதால் அவர்களுக்கு இடையே இருக்கும் மனக்கசப்பு சீக்கிரம் விலகி இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என லஷ்மி நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் இப்பொழுது அப்பா அம்மாவிடம் இப்படி கடுமையாக பேசியது அவளது மனதை பெரிதும் பாதிக்கிறது. இருப்பினும் லஷ்மியின் குணம் சௌந்தர்யாவை போல் இருப்பதால் இதற்கெல்லாம் அசராத லஷ்மி, அம்மா -அப்பா இருவரையும் சேர்த்து வைக்க வேறு என்ன செய்வது என யோசிக்க போகிறாள்.
அத்துடன் மன கஷ்டத்தில் இருக்கும் தன்னுடைய அம்மா, கண்ணம்மாவை வேறு எதையாவது பேசி அவளை சந்தோஷப்படுத்த விரைகிறாள். இப்படி பாரதிகண்ணம்மா சீரியலில் கணவன் மனைவியை சேர்ந்து வைக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படாத பாடுபடுகின்றனர். இதற்கெல்லாம் ஒரே தீர்வு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும். ஹாஸ்பிடலிலேயே இருக்கும் அவர்களுக்கு அந்த யோசனை மட்டும் வராது.