ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எம்ஜிஆர் இயக்கிய சூப்பர் ஹிட் 3 படங்கள்.. கடைசிவரை நிறைவேறாத அந்த ஒரு படம்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய நடிப்பு மூலம் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெற்றார். மேலும் மக்களுக்காக பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளார். சினிமா துறையில் எம்ஜிஆர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். அந்த வகையில் எம்ஜிஆர் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் ஆன 3 படங்களை பார்க்கலாம்.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் : எம்ஜிஆர் இயக்கத்தில் 1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் எம் ஜி ஆர், எம் என் நம்பியார், பி எஸ் வீரப்பா, லதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் அகிலனின் கயல்விழி என்ற தொடர் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது எம்ஜிஆரின் கடைசி படமாக இருந்தது. அதன்பிறகு எம்ஜிஆர் முழுநேரமாக அரசியலில் செயல்பட்டு வந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் : எம்ஜிஆர் இயக்கத்தில் 1973 இல் வெளியான திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இப்படத்தில் எம்ஜிஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தை எம்ஜிஆரே தயாரித்திருந்தார். மேலும் அப்போது நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரமின்றி இப்படம் வெளியானது.

நாடோடி மன்னன் : எம்ஜிஆர் இயக்கத்தில் 1958-ல் வெளியான திரைப்படம் நாடோடி மன்னன். இப்படத்தின் மூலம்தான் எம்ஜிஆர் இயக்குனராக அறிமுகமானார். மேலும் இப்படத்தில் எம் ஜி ஆர், எம் என் நம்பியார், சந்திரபாபு, பி எஸ் வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

மேலும் எம்ஜிஆரின் நிறைவேறாத ஒரு ஆசையும் உள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் முயன்றார். அப்போது எம்ஜிஆருக்கு விபத்து ஏற்பட்டதால் இந்தப் படம் எடுக்க முடியாமல் போனது. தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்துள்ளார்.

Trending News