இளவயதிலேயே வயதான கதாபாத்திரத்தில் மிரட்டிய 7 நடிகர்கள்.. வேலு நாயக்கருக்கு டஃப் கொடுத்த சிவசாமி

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவில் நடிகர்கள் இளம் வயதிலேயே வயதான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது ஒன்றும் புதிது அல்ல. அப்படி நடிப்பதற்கு நல்ல மனத்திடமும் கதையம்சமும் வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழில் நிறைய நடிகர்கள் அதுபோல இளம் வயதிலேயே வயோதிக கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவற்றுள் சில பிரபலமான கதாபாத்திரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

தனுஷ் – அசுரன்: தற்போதுள்ள நவீன தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் வெகு சில நடிகர்களில் தனுஷும் ஒருவர். அந்த வகையில் இவர் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து உருவாக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி திரைப்படங்களே. இறுதியாக அவர்கள் இருவரும் இணைந்த திரைப்படம் அசுரன். எழுத்தாளர் பூமணி அவர்களின் நாவலான வெக்கை எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை எழுதி இருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். நிலத்துக்காக நடக்கும் சண்டைகளும் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் இந்த திரைப்படம் உணர்த்துகிறது. இந்தப் படத்தில் தனுஷ் இரு மகன்களுக்கு தந்தையாக நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான போது அவருக்கு வயது 35 ஆனால் 60 வயது கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்து இருந்தார்.

ரஜினிகாந்த் – நெற்றிக்கண்: ரஜினிகாந்த் அவர்களது நடிப்புகள் 1981 ஆம் ஆண்டு வெளியில் வந்த திரைப்படம்தான் நெற்றிக்கண். இந்த திரைப்படத்தை எஸ்பி.முத்துராமன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த வித்தியாசமான கதை அம்சம் கொண்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். அதில் முதியவர் வேடத்தில் பெண்களிடம் அதிகமாக வழியும் கதாபாத்திரத்தில் நகைச்சுவையுடன் திறம்பட நடித்து இருந்தார். 55 வயதை கடந்துவிட்ட இந்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்தபோது அவருக்கு வயது வெறும் 31. இந்த திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

அஜித்குமார் – வரலாறு: தந்தை இரு மகன்கள் என்று மூன்று கதாபாத்திரங்களில் அஜித் குமார் நடித்த திரைப்படம் வரலாறு. இந்த திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் அவர்கள் இயக்கியிருந்தார் ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் முன்னாள் பரதநாட்டிய கலைஞராகவும் அஜித் நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த கதாபாத்திரத்தை அஜித் அவர்கள் ஏற்று நடித்த போது அவருக்கு வயது 34

விஜய் சேதுபதி – ஆரஞ்சு மிட்டாய்: விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வயதானவராக நடித்த திரைப்படம் ஆரஞ்சு மிட்டாய். இதய நோய் கொண்ட நோயாளியாக விஜய்சேதுபதி நடித்து இருக்கும் இந்த திரைப்படம் ஒரு ப்ளாக் ஹ்யூமர் வகையைச் சேர்ந்தது. இவரிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் ஆம்புலன்ஸ் நடத்துனர் ஓட்டுனர் கதையை முடிந்தவரை சுவாரசியமாக கொடுத்திருந்தனர். விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தை சொந்தமாக தயாரித்தும் இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

சூர்யா – வாரணம் ஆயிரம்: நடிகர் சூர்யா அவர்கள் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் மற்றொரு சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். 34 வயதாகும் போது அவர் 60 வயது முதியவராக நடித்திருந்தார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். தனது தந்தையை மனதில் வைத்து இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாக இயக்குநர் கௌதம்மேனன் பின்னாளில் தெரிவித்தார்.

விஜயகாந்த் – செந்தூரப்பூவே: செந்தூரப்பூவே திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் முன்னாள் ராணுவ தளபதியாக வயதான பாத்திரத்தில் நடித்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் ராம்கி, நிரோஷா, சந்திரசேகர் ஆகியோரும் உடன் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன் – சலங்கை ஒலி, நாயகன், இந்தியன்: ஆண்டவர் கமல்ஹாசன் அவர்கள் முதியவராக நடிப்பது ஒன்றும் தமிழ்சினிமாவில் புதிதில்லை. சலங்கை ஒலி திரைப்படத்தில் அவர் 60 வயது முதியவராக நடித்திருந்த போது அவருக்கு வயது வெறும் 32. நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் மூன்று முக்கியமான வாழ்க்கை சம்பவங்களை குறிக்கும் வகையில் நடித்திருந்த காரணத்தால் முதுமை தோற்றத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதுபோல இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தில் இந்தியன் தாத்தா சேனாபதி ஆக நடித்து கலக்கி இருந்தார்.