பிரியமானவளே படத்தை மிஞ்சிய தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியல்.. சிம்ரனாகவே மாறிய அபி!

விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியலில் தற்போது யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் வெற்றி கதாபாத்திரத்தில் வினோத் பாபுவும், அபி கதாபாத்திரத்தில் பவித்ராவும் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சீரியலில் எதிர்பாராத விதத்தில், ரவுடியாக இருக்கும் வெற்றிக்கும் வெளிநாட்டில் படித்து சொந்த ஊர் திரும்பிய வசதிபடைத்த பெண்ணான அபிக்கும் திருமணம் நடக்கும். திருமணம் நடந்தபின் தாலி கட்டியவர் தான் தனக்கு புருஷன் என்பதை மனதில் நினைத்து ரவுடி வெற்றியின் வீட்டிற்கே அபி சென்று அவனுடன் வாழ முயற்சிப்பார் .

இருப்பினும் தன்னுடைய குணத்திலிருந்து மாறாமல் இருக்கும் வெற்றி எப்படியாவது அபியை மனைவியாக விரைவில் ஏற்றுக் கொள்வான் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சமீபத்தில் அபியின் தந்தை பயங்கர ரவுடி கும்பலால் கடத்தப்பட்டு அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

அபியின் தந்தையை காப்பாற்றிக் கொடுத்தால், இந்த வீட்டை விட்டும், உன்னுடைய வாழ்த்தி விட்டு சென்று விடுவேன் என வெற்றி போட்ட அக்ரிமெண்ட்டுக்கு அபி உடன்பட்டாள். எனவே வெற்றி அபியின் தந்தையை காப்பாற்றி உயிருடன் கொடுத்ததால், அபி சொன்னபடி வீட்டை விட்டு பெட்டி படுக்கையுடன் தன்னுடைய அம்மா வீட்டிற்கு அபி கிளம்புகிறாள்.

கிளம்பும்போது அபியிடம் வெற்றி, ‘அந்த தாலியை கழட்டி குடு என்று கேட்க’ இதை மட்டுமாவது ஞாபகமாக வைத்துக் கொள்கிறேன் என அபி கண்கலங்கி பேசிய ப்ரோமோ தற்போது வெளியாகி சின்னத்திரை ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் அக்ரிமென்ட் போடுவது போன்றுதான் பிரியமானவளே படத்திலும் கதை அமைந்திருக்கும். எனவே தற்போது ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களும் ஏதாவது ஒரு படத்தை அப்படியே காப்பியடித்த கொண்டிருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கிண்டலடிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →