நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பு அசுரன் என்றே சொல்லலாம். இவருடைய நடிப்பை மிஞ்ச தற்போதுவரை எந்த நடிகரும் வரவில்லை. ஆனால் அந்த காலத்திலேயே சிவாஜிக்கு இணையாக நடிப்பில் அசத்திய ஒரு நடிகை உள்ளார். அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தன்னுடைய 13-வது வயதிலேயே சினிமாவில் நுழைந்தவர். மேலும் நடிகை, எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர், எடிட்டர், ஸ்டூடியோ உரிமையாளர் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். மேலும் தமிழ் சினிமாவில் ஒரு சிங்கப்பென் ஆகவே வலம் வந்தார்.
இந்த நடிகை சிவாஜியுடன் 11 படங்களும், எம்ஜிஆருடன் 11 படங்களும் மொத்தம் இவர்கள் இருவருடன் சேர்ந்து 22 படங்கள் நடித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. 60, 70 களில் தமிழ் சினிமாவையே ஆட்சி செய்த நடிகை பானுமதி தான்.
அவருடைய நடிப்புக்கு தற்போது வரை யாராலும் ஈடு கொடுக்க முடியாது. நடிகர் பிரசாந்த்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த செம்பருத்தி படத்தில் அவருடைய பாட்டி புவனேஸ்வரி ஆக பானுமதி நடித்திருப்பார். இவர் தன்னுடைய 80 வது வயதில் உடல்நல குறைவால் காலமானார்.
தன்னுடைய இறுதிக் காலம் வரை படங்களில் நடித்தார். மேலும் பானுமதி பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் சினிமாவில் இருக்கும் போது கோபக்கார நடிகை என்ற பெயரைப் பெற்றிருந்தார். ஏனென்றால் இவர் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாகப் பேசக் கூடியவராம்.
தன்னுடன் அன்பாக இருப்பவர்களிடம் அன்பாகவும், எதிர்மறையாக பேசினால் அவர்களுக்கு இடம் இருமடங்கு கோபப்படுவாராம். யாருக்கும், எதற்காகவும் பயப்படாமல் தன் மனதை பட்டதை அப்படியே முகத்துக்கு நேராகவே பேச கூறிவிடுவாராம். தற்போது வரை தமிழ் சினிமாவில் இந்த பானுமதி என்ற சிங்கப்பெண் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.