சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் என்றாலே பட்டிதொட்டியெங்கும் களைகட்டி ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவர். இந்த நிலையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி எப்போதுமே நன்றாக இருக்கும். இந்த நிலையில் இவர்கள் இருவரின் காம்போவில் வெளிவர இருந்த ஜக்குபாய் திரைப்படம் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
முத்து,படையப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவ்விரண்டு திரைப்படங்களும் பெருமளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையை படைத்தது அப்போது தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவிற்கு பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் கே எஸ் ரவிக்குமாரின் கூட்டணியில் இணைந்தார். ஜக்குபாய் என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு சில நாள் வரை ஷூட்டிங் சென்றது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்திய நிலையில் திடீரென இத்திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விலகினார் ரஜினிகாந்த்.
ஜக்குபாய் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினிகாந்த் ஆப்கானிஸ்தான் தீவிரவாதி போல் உடை அணிந்து, நெற்றியில் குங்குமம் பொட்டு பக்கத்தில் துப்பாக்கியுடன் அமர்ந்து கொண்டு பார்க்கும் போஸ்டர் வெளியானது. அதில் ஆப்கானிஸ்தான் நபர்கள் போல் ரஜினிகாந்த் இருப்பார். இது ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்ப்பை கிளப்பியது. மேலும் ஜக்குபாய் இன் முதல் பாதியை கதை எழுதி விட்டோம் இரண்டாம் பாதியின் கதை எழுதும்போது எப்படி பார்த்தாலும் பாட்ஷா படத்தின் கதையை போலவே இருந்தது அதனால்தான் இப்படத்தை டிராப் செய்ததாகவும் கூறினார்
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ஸ்ரேயாவின் நடிப்பில் ஜக்குபாய் திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கினார். 2010ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டது. இப்படத்தின் கதைக்களம் அவ்வளவு சுவாரசியமாக இல்லாததால் இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் அப்போது வளர்ந்து வந்த சரத்குமாருக்கும் இத்திரைப்படம் மிகப்பெரிய அடியாக இருந்தது.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேர்த்தியாக இத்திரைப்படத்தை கைவிட்டு பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருடன் 2014ஆம் ஆண்டு லிங்கா திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிகை அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் கேஎஸ் ரவிக்குமார் ரஜினியோடு மீண்டும் கைகோர்த்து தன்னுடைய நேர்த்தியான டைரக்சனை திரைப்படத்தில் காண்பித்து இருப்பார்.