பாக்ஸ் ஆபீஸில் முதல் 2 இடத்தை பிடித்த தென்னிந்திய படங்கள்.. பின்னுக்குத் தள்ளப்பட்ட பாலிவுட் மூவி

இந்திய அளவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த படங்களை பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் வசூல் சாதனை செய்திருக்கிறது. கடந்த மாதம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா திரைப்படமாக வெளியானது.

இந்த படம் மற்ற மொழிகளை விட ஹிந்தியில் வசூலில் முன்னிலை வகிக்கிறது. தற்போது வரை 370 கோடி வசூலை ஹிந்தியில் மட்டும் செய்திருக்கும் நிலையில், இந்த வார இறுதிக்குள் 400 கோடி வசூலை கேஜிஎப் 2 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்திய அளவில் ஹிந்தியில் மட்டும் அதிக வசூலை குவித்த படங்களின் வரிசையில் 510 கோடியை வசூலித்த திரைப்படம், 2017 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு படமான பாகுபலி 2.

அதைத் தொடர்ந்து 2-து இடத்தில் 387 கோடிகளை வசூலித்த ஹிந்தித் திரைப்படம், கடந்த  2016ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் டங்கல். தற்போது இந்தப் படத்தை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்தை கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 வெளியான சில நாள்களிலேயே பிடித்திருக்கிறது.

இப்படி பாலிவுட் திரைப்படங்களை பாக்ஸ் ஆபிஸில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க விடாமல் தென்னிந்தியப் திரைப்படங்கள் ஆக்கிரமித் திருப்பது ஆரோக்கியமான போட்டியாகவும், சினிமாவின் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற பார்வையில் திரைத்துறையை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்த வாரத்திற்குள் தமிழகத்திலும் கன்னட திரைப்படம் கேஜிஎப் 2 நிச்சயம் 100 கோடி வசூலை தாண்டிவிடும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த அளவிற்கு கேஜிஎப் 2 திரைப்படம் ஆல்-ரவுண்டராக உலகெங்கும் கொடிகட்டி பறப்பதுடன் தன்னுடைய வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது.