வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பாக்ஸ் ஆபீஸில் மரண அடி வாங்கிய ஆர்ஆர்ஆர் பட ஹீரோ.. இப்ப சொல்லுவாங்க பீஸ்ட் பரவாயில்லனு

ராம்சரண், சிரஞ்சீவி நடிப்பில் கடந்த வாரம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ஆச்சார்யா. இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக சோனு சூட் நடித்து இருந்தனர். கடந்த மாதம் ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி இருந்தது.

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் உருவான அந்த திரைப்படம் பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. அதன் பிறகு வெளியான இந்த ஆச்சார்யா திரைப்படம் மிகப்பெரிய வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப படம் வெளியான முதல் நாளே 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. ஆனால் போகப்போக வசூல் நிறைய இருக்கும் என்று எதிர்பார்த்த படக்குழுவுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தற்போது படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.

வார இறுதியில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்த போதிலும் கடந்த இரு நாட்களில் இப்படம் மிக குறைவான வசூலையே பெற்றிருக்கிறது. மேலும் இப்படம் இன்னும் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூலித்தால் மட்டுமே நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது.

ஆனால் இனிவரும் நாட்களில் அது நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தப் படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி இருக்கிறது. இதேபோன்றுதான் விஜய்யின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் பல கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தது.

அதனால் அப்படம் தோல்வி அடையும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் வசூலில் மாஸ் காட்டியது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் கூட இன்னும் தியேட்டர்களில் அந்த படத்திற்கு கணிசமான கூட்டம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் பீஸ்ட் திரைப்படம் நஷ்டம் அடையாமல் தப்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த அதிர்ஷ்டம் ராம் சரணுக்கு கிடைக்காமல் இந்த ஆச்சர்யா திரைப்படம் படுதோல்வியடைந்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News