மொத்த படக்குழுவும் சரண்டர்.. ராஷ்மிகாவிடம் தலையாட்டி பொம்மையாக மாறிய விஜய்

கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தாலும் நடித்தார், எங்கே போனாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே காத்துக்கொண்டிருக்கிறது. இவர் அந்த படத்தில் ‘சாமி சாமி’ பாடலுக்கு ஆடிய ஆட்டத்திற்கு மொத்த தமிழ்நாடே கிறங்கிப் போய்க் கிடக்கிறது.

எங்கே போனாலும் இவர் ஆடிய அந்த ஆட்டத்தை  ஆட சொல்லி வற்புறுத்துகின்றனர் இவரும் ஆடுகிறார். இப்பொழுது தளபதி 66 படத்திற்காக விஜய்யுடன் ஜோடி சேர காத்திருக்கிறார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு நான்கு படங்கள் நடித்து வருகிறார். அந்தப் படங்களில் நடித்துவிட்டு தளபதி 66 படத்தை 4 நாட்கள் தள்ளிப் போடும்படி வைத்துவிட்டாராம்.

அவருக்காக மொத்த படக்குழுவும் மட்டுமன்றி விஜயும் காத்துக் மூன்று நாட்கள் இருந்தாராம். இதற்கு விஜய்யும் வளைந்து கொடுப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. எனவே மே 1ஆம் தேதி துவங்க இருந்த ஷூட்டிங் தற்போது மே 4ஆம் தேதி நடைபெறுகிறதாம்.

எனவே தளபதியின் 66வது படத்தை தில் ராஜு தயாரிக்க, தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்க இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது, மேலும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் திரைப்படமாக உருவாக்கப் போகிறது.

எனவே இந்த மாதம் துவங்கப்பட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் நிறைவடைந்து, வருகிற தீபாவளி பண்டிகைக்கு படம் ரிலீசாகும் என ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பு காலதாமதம் ஏற்பட ராஷ்மிகா காரணம் என்பதை அறிந்த தளபதி ரசிகர்கள் அவர் மீது கொஞ்சம் காட்டேரி உள்ளனர்,

‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பதற்கேற்ப ராஷ்மிகா மந்தனா, மார்க்கெட் இருக்கும் போது தன்னுடைய கெத்தை காட்டுக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஷூட்டிங்கை தள்ளிப் போடுகிறாரா என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →