ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பார்த்திபன் மேல் இருக்கும் கரும்புள்ளி.. கேரியரில் அவப்பெயரை பெற்று கொடுத்த ஒரே ஒரு படம்

பார்த்திபன் தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து வருகிறார். தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை செய்து வரும் பார்த்திபன் இந்த படத்திலும் யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒரு புதுமையை செய்திருக்கிறார்.

96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து அசத்தி இருக்கிறார் பார்த்திபன். அது எப்படி எடுக்க முடியும் என்று எல்லோரும் வியப்பாக பார்த்தனர். ஆனால் முடியும் என்பதற்கேற்ப படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு பார்த்திபன் அத்தனை பேரையும் வாயடைக்க செய்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து கொண்டிருக்கிறார். ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்துக்காட்டுவது அத்தனை சுலபம் கிடையாது. அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. இந்தப் படத்திற்காக அவர் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ரிகர்சல் மட்டுமே பார்த்தாராம்.

அதன் பிறகு படத்தை எடுக்க முடிவு செய்த போது பல ஷாட்டுகள் சொதப்பலாக வந்திருக்கிறது. அதனால் படத்தை திரும்பவும் முதலில் இருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராத பார்த்திபன் அவர் நினைத்தபடி படம் வரும்வரை எடுத்திருக்கிறார்.

கடைசியாக இருபத்தி மூன்றாவது ஷாட்டில்தான் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். அதேபோன்று தான் அவர் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்த அந்த திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி தன்னுடைய திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பார்த்திபனின் கேரியரில் ஒரு மோசமான திரைப்படமும் இருக்கிறது. 1993 இல் பார்த்திபன் மற்றும் ஐஸ்வர்யாவின் நடிப்பில் வெளியான உள்ளே வெளியே திரைப்படம் தான் அது.

அவர் இயக்கத்தில் வெளிவந்த அந்தப் படத்தில் பல ஆபாசமான வசனங்கள் இடம் பெற்றிருக்கும். அதனால் இந்த படம் பல விமர்சனங்களையும் சந்தித்து அவருக்கு கெட்ட பெயரைக் கொடுத்தது. சொல்லப் போனால் அந்தப் படம் இன்றும் பார்த்திபனின் திரைவாழ்வில் ஒரு கரும்புள்ளி ஆகவே அமைந்துவிட்டது.

Trending News