ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அந்த நடிகை. வித்தியாசமாக சிரிக்கும் அவருடைய சிரிப்பும், துரு துரு நடிப்பும் அவரை விரைவிலேயே முன்னணி நடிகையாக மாற்றியது.
அந்த சமயத்தில் அவர் ஒரே ஒரு பம்பர காட்சியில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்கடித்தார். அதன்பிறகு கை நிறைய படங்களில் நடித்துக்கொண்டு புகழுடன் வாழ்ந்த நடிகை, நிஜ வாழ்விலும் ராணி போல் வாழ்ந்திருக்கிறார். அவரைச் சுற்றி ஏகப்பட்ட வேலைக்காரர்கள் எப்போதும் இருப்பார்களாம்.
இப்படி சொகுசாக வாழ்ந்த நடிகை ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டிலேயே செட்டில் ஆனார். ஆனால் இங்கு ராணி போல் வாழ்ந்த நடிகை கணவரிடம் அடங்கி இருக்க முடியாமல் விரைவில் விவாகரத்து செய்துகொண்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
பிறகு சினிமாவில் நடிக்க விரும்பிய அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. திருமணமான நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையும் என்பது எழுதப்படாத விதி. அதனால் கிடைத்த சீரியல்களில் நடித்து வந்த நடிகைக்கு பிரபல கட்சியின் அமைச்சருடன் தொடர்பு ஏற்பட்டது.
சொல்லப்போனால் திருமணத்திற்கு முன்பிலிருந்து நடிகை அவரின் கட்டுப்பாட்டில் தான் இருந்தாராம். அதனால்தான் கணவரை விவாகரத்து செய்து வந்ததாக அரசல் புரசலாக செய்திகள் வெளியானது. இது நடிகையின் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏனென்றால் நடிகை அதுவரை ஒரு கிசுகிசுவில் கூட சிக்கியது கிடையாது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இந்த விஷயத்தைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். அதன்பிறகு அரசியல்வாதியின் கட்டுப்பாட்டில் நடிகை இருந்ததால் அவரை தங்கள் படங்களில் புக் செய்ய பலரும் தயங்கி வந்தனர்.
அதனால் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் ஒட்டுமொத்தமாக குறைந்துபோனது. இப்போது நடிகை அந்த அரசியல் பிரபலத்தை விட்டு விட்டு தனிமையில் தான் வாழ்ந்து வருகிறாராம்.