வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

17 அரியர் வைத்த விஜய் டிவி பிரபலம்.. இப்பவும் அவங்க தான் டாப்பு, திறமைக்கு படிப்பு தடை இல்ல

படிப்புதான் நாளைக்கு உனக்கு சோறு போடும் என்ற வார்த்தையை எல்லோரும் பலமுறை கேட்டிருப்போம். ஆனால் படிப்பறிவு இல்லாமலும் வாழ்க்கையில் சாதித்த பல நபர்களை நாம் பார்த்திருப்போம். அவ்வாறு விஜய் டிவியில் உள்ள பிரபலமான நடிகை ஒருவர் தனது கல்லூரி வாழ்க்கையில் 17 அரியர் வைத்துள்ள செய்தியை அவரே வெளியிட்டுள்ளார்.

அவர் தன்னுடைய 17 வயதிலேயே மாடலாக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தால் நடனம் கற்றுக் கொண்டு நடன பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். அப்போது இவர் இணையத்தில் வெளியிடும் வீடியோக்கள் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். அதன் பிறகுதான் விஜய் டிவியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் வேறு யாரும் இல்லை ராஜா ராணி தொடரில் சென்பாவாக நடித்த ஆலியா மானசா தான். இதைத்தொடர்ந்து இத்தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணமான ஒரு வருடத்திலேயே ஐலா என்ற பெண்குழந்தை இவர்களுக்கு பிறந்தது. இதைத்தொடர்ந்து ராஜா ராணி 2 தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதால் இத்தொடரில் இருந்த ஆலியா விலகினார். இப்போது ஒரு ஆண்குழந்தை இவர்களுக்கு பிறந்துள்ளது.

இந்நிலையில் ஆலியா மானசா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அதில் கல்லூரி படிக்கும் போது உங்கள் பர்சன்டேஜ் என்ன என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆலியா, நான் கல்லூரி படிக்கும் போது 17 அரியர் இருந்ததால் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு என கூறியுள்ளார்.

மேலும், இன்னைக்கு உள்ள நிலைமையை பற்றி யாரோ வருத்தப்படாதீங்க, உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதை நோக்கி போனீங்கன்னா கண்டிப்பா உங்க வாழ்க்கை மாறும் என ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லியுள்ளார் ஆலியா மானசா. அவ்வாறு நமக்கு எதில் திறமை இருக்கிறதோ அதை நோக்கி போனால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.

alya manasa
alya manasa

Trending News