நேரம் என்பது ஒருவரை கோபுரத்திலும் வைக்கும், குப்பை மேட்டிலும் கொண்டு சேர்த்துவிடும். அதுவும் சினிமா திரையுலகில் இப்படிப்பட்ட சம்பவங்கள் பலருக்கும் நடந்துள்ளது. அதற்கு பல உதாரணங்களும் உண்டு. அதில் சில நடிகர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது உச்சாணிக் கொம்பில் இருக்கும்.
ஆனால் பலருக்கு அந்த அதிர்ஷ்டம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். அவர்கள் என்னதான் கடுமையான உழைப்பைக் கொட்டி, திறமையாக நடித்தாலும் அவர்களுக்கு ஜெயிக்கும் வாய்ப்பு என்பது குறைவுதான். அப்படி அழகும், திறமையும் இருந்தும் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போனவர் தான் அந்த பிரபல நடிகர்.
இவர் ஒரு காலத்தில் ரஜினி, கமல் போன்ற ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்தவர். ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து அவர்களின் பாராட்டை பெற்ற பெருமைக்குரியவர். இப்படி திரையுலகில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்த இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இப்போதும் இருக்கிறார்கள்.
இவ்வாறு பலரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட இந்த நடிகர் இன்று சினிமாவில் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சினைகளின் காரணமாக அவர் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
அதன்பிறகு அவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தமிழிலும் அதே போன்று வாய்ப்பு வந்ததால் அதை எல்லாம் உதறி தள்ளிவிட்டு ஹீரோவாக சில திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால் அவை அனைத்தும் விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்றாலும், வசூல் ரீதியாக சில சறுக்கல்களை சந்தித்து. இருப்பினும் இவருக்கு திரையுலகில் முன்பு இருந்த அதே ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்களிடம் கூட இவர் மிகவும் அன்பாக பழகக்கூடியவர்.
தற்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் 7, 8 பவுன்சர்களை வைத்து சுற்றிக் கொண்டிருக்கும் போது இவர் பத்திரிக்கையாளர்களின் தோளில் கைபோட்டுக் கொண்டு ஜாலியாக பேசுவாராம். அந்த வகையில் ஒரு நல்ல நடிகனாக, தந்தை சொல் மீறாத மகனாக இருக்கும் இவர் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்று மும்முரமாக இருக்கிறார்.
அதன்படி இவர் விரைவில் ஒரு பான் இந்தியா திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வெளிவந்தால் இவர் மறுபடியும் ரசிகர்கள் போற்றும் நாயகனாக உயர்வார் என்பதில் சந்தேகமில்லை.