வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிரிவைப் பற்றி பேசிய ரக்ஷிதா.. ஒரு பொண்ணுக்கு இத்தனை சோதனையா

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் ஆன சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் ரக்ஷிதா. இத்தொடரில் பிக் பாஸ் கவின் உடன் இணைந்து ரக்ஷிதா நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இதே தொலைக்காட்சியில் பல சீரியல்களில் ரக்ஷிதா நடித்தார்.

இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மெர்ஜி செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகி ஜீ தமிழில் சொல்ல மறந்த கதைத் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு ஊடகத்திற்கு ரக்ஷிதா பேட்டி கொடுத்திருந்தார்.

அதாவது சொல்ல மறந்த கதை தொடரில் கணவனை இழந்து இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். அதனால் இந்த கதாபாத்திரம் எனது சொந்த வாழ்க்கையோடு ஒத்துப் போவதாக கூறியுள்ளார். அதாவது நானும் இப்போது தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு தினேஷ் சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு ரக்ஷிதா, தினேஷ் இருவரும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியாபுரம் தொடரில் நடித்து இருந்தனர்.

அதன் பின்பு தினேஷுக்கு சீரியலில் வாய்ப்பு கிடைக்காததால் ரக்ஷிதா, தினேஷ் இருவர் இடையே சண்டை வந்துள்ளது. தன்னுடைய மனைவி தன்னை விட அதிகமாக சம்பாதிப்பதாக தினேஷ் நினைத்ததால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் முற்றி பிரிந்துவிட்டனர்.

இதனால் ரக்ஷிதா தற்போது தனியாகத் தான் வாழ்ந்துவருகிறார். அதைதான் ரக்ஷிதா தற்போது அந்தப் பேட்டியில் தான் தனிமையாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த சூழ்நிலையை சமாளிக்கும் மெச்சூரிட்டி தனக்கு இருப்பதாகவும் அந்த பேட்டியில் ரக்ஷிதா கூறியுள்ளார்.

Trending News