சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கேஜிஎஃப் 2ல் வைத்த ட்விஸ்ட்.. பார்ட் 3-யில் சப்ரைஸ் கொடுக்கப்போகும் ராக்கி பாய்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கேஜிஎஃப் 2. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதை தொடர்ந்து வெளியான இந்த இரண்டாம் பாகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படத்தை இன்னும் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அதிலும் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் ரசிகர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் ராக்கி பாயாக நடித்திருக்கும் யாஷ் தற்போது இந்திய அளவில் பிரபலமாக மாறி இருக்கிறார்.

அதன்படி கேஜிஎப் மூன்றாம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. மேலும் கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இறுதிக்காட்சி பயங்கர ட்விஸ்ட்டுடன் முடிக்கப்பட்டு இருந்தது. விமானத் தாக்குதலில் ராக்கி பாய் கடலில் மூழ்கியது போல் காட்டப்பட்டிருந்த அந்த காட்சி பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதன் மூலம் ராக்கி பாய் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது போன்ற பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருந்தது. ரசிகர்களின் இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் இயக்குனர் கே ஜி எப் 3 திரைப்படத்தின் மூலம் பதில் அளிக்க இருக்கிறார்.

மேலும் கடலில் விழுந்த ராக்கி பாய் உயிரோடுதான் இருக்கிறார். அவர் ஒரு நீர்மூழ்கி கப்பலின் வழியாக தப்பித்து விடுவது போல் மூன்றாம் பாகத்திற்கான கதைக்களம் தயார் செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு அவர் வேறு நாட்டுக்கு செல்வது போலவும், கே ஜி எஃப் 2 வில் சொல்லி முடிக்கப்படாத சில விளக்கங்களும் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த கே ஜி எஃப் 3 படத்தின் அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அடுத்த பாகம் அனைவரும் எதிர்பாராத வகையில் மிகவும் பிரம்மாண்டமாகவும், ஹாலிவுட் உட்பட பல மொழிகளில் இருக்கும் முன்னணி நடிகர்களும் அதில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News