மலையாள திரைப்படங்களின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அந்த இளம் நடிகை. முதல் திரைப்படத்திலேயே அதிக அளவு கவனிக்கப்பட்ட அந்த நடிகை தமிழில் ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானார். அந்தப் படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு போகவில்லை என்றாலும் நடிகையின் நடிப்பு அந்த படத்தில் பாராட்டைப் பெற்றது.
அதன்பிறகு தமிழில் ஒரு சில திரைப்படங்களில் தலை காட்டிய நடிகை 60 லட்சம் முதல் 75 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். பிறகு ஓரளவுக்கு பிரபலம் ஆக மாறிய அந்த நடிகை தன்னுடைய சம்பளத்தை ஒரேயடியாக ஒரு கோடி ரூபாயாக ஏற்றிவிட்டார்.
அதனால் அவரை புக் செய்ய வந்த தயாரிப்பாளர்கள் அவர் பக்கமே தலை வைத்து படுப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதனால் தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் வராமல் போனது. ஆனாலும் நம்ம கெத்தை விடக் கூடாது என்று அவர் முடிவு செய்தார். அதனால் தமிழ் இல்லாவிட்டால் என்ன நம்மிடம் தான் திறமையும், அழகும் கொட்டிக் கிடக்கிறதே என்று யோசித்த நடிகை தெலுங்கு பக்கம் சென்றார்.
சென்ற வேகத்தில் அங்கேயும் ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்தார். ஆனால் பெரிய நடிகர்களின் படங்களில் எல்லாம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் பெரிய தயாரிப்பாளர்கள் யாரும் நடிகையை நெருங்கவும் இல்லை. இதனால் சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் தான் அவரை தேடி வந்து வாய்ப்பு கொடுத்தனர்.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத நடிகை ஒரு கோடி ரூபாயிலேயே பிடிவாதமாக இருந்துள்ளார். அவ்வளவு எல்லாம் எங்களால் தர முடியாது பத்து, பதினைந்து லட்சம் வேண்டுமானால் தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
அதனால் அதிர்ந்து போன நடிகை இந்த சம்பளம் எல்லாம் என்னுடைய மேக்கப் செலவுக்கே காணாது என்று கூறி எல்லோரையும் விரட்டி அடித்து விட்டாராம். கிடைத்த வாய்ப்பும் தற்போது பறிபோனதால் நடிகை வாய்ப்பில்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாராம்.