ரசிகர்கள் பல காலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நம்பர் நடிகையின் திருமணம் தற்போது உறுதியாகி இருக்கிறது. சில வருடங்களாக நடிகை தன்னுடைய திருமணத்தை இழுத்தடித்து வந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் திருமண அறிவிப்பால் ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகையின் மீது அவருடைய வருங்கால மாமியாரும், குடும்பத்தினரும் பயங்கர கடுப்பில் இருக்கிறார்களாம். நடிகைக்கும், அவரது காதலருக்கும் பல மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. அதனால் திருமணத்தை விரைவாக நடத்த வேண்டும் என்று காதலரின் வீட்டிலிருந்து நெருக்கடிகள் வந்து கொண்டே இருந்தது.
இது எதையும் கண்டுகொள்ளாத நம்பர் நடிகை சமீபத்தில் வெளியான திரைப்படம் முடிந்த பிறகுதான் திருமணம் என்று காதலரிடம் கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் டென்ஷனான காதலரின் குடும்பம் இந்த திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள்.
ஆனால் காதலர் தான் எப்படியோ கெஞ்சி கூத்தாடி அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் தான் நம்பர் நடிகை எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் திருமண தேதியை கூட அவர்களிடம் கலந்து சொல்லாமல் மீடியாவுக்கு அறிவித்திருக்கிறார்.
இதனால் காதலரின் குடும்பத்தினர் நடிகையின் மீது பயங்கர அதிருப்தியில் இருக்கின்றனர். சொல்லப்போனால் இந்த திருமணத்திற்கு அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். காதலிக்க ஆரம்பித்தது முதலே காதலரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு முடிவெடுத்து வரும் நடிகையை பற்றிதான் தற்போது கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.