ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தமிழ் ஹீரோக்களுக்கு குட்பை சொல்லும் நயன்தாரா.. திருமணத்திற்கு பின் வேற ரூட்டில் அம்மணி

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சுமார் ஆறு வருடங்களாக காதலித்துக் கொண்டிருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதுவும் இவர்கள் திருமணம் ஜூன் 9-ம் தேதி நடைபெற இருப்பதாக சமீபத்தில் வெளியானது. ஆகையால் இவர்களது திருமண ஏற்பாடுகள் திருப்பதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

ஆனால் ஹிந்தியில் பிரபல நடிகையாக வளரவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தன்னுடைய திருமணத்தை முடித்தவுடன் சல்மான்கான் படத்திலும் நடிப்பதற்கு நயன்தாராவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்னும் ஒரு சில பாலிவுட் படங்களிலும் கமிட்டாகிறார். இதனால் இனிமேல் கோடம்பாக்கம் பக்கம் நயன்தாரா வர மாட்டார் என பலரும் கூறி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பாரா இல்லையா என்பதைப் பொருத்துதான் அவர் பாலிவுட்டா? கோலிவுட்டா? என்பதை முடிவு செய்வார் எனவும் கூறுகின்றனர்.

மேலும் இவர் நடிக்கும் படங்களிலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெறுவதால் பல தயாரிப்பாளர்களும் நயன்தாரா நடித்தால் ராசி என கூறிவருகின்றனர். அதனால் தான் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறி வருகின்றனர்.

‘உழைக்கிற மாடு தான் ஊருக்குள்ள விலை போகும்’ என்பதுபோல நயன்தாரா தன்னுடைய உழைப்பினால் மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அவரை ராசியான நடிகை என சொன்னாலும் அவருடைய நடிப்புதிறமையால் மட்டுமே இந்த லெவலுக்கு வந்திருக்கிறார்.

Trending News