சும்மா கெத்தா, ஸ்லிம் மற்றும் ஸ்டைல்லாக மாறிய அஜித்.. ஏகே 61ற்கு போட்ட ஸ்கெட்ச்

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜீத் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பேங்கில் நடக்கும் திருட்டு சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அந்த வகையில் அஜீத் இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைக்க போவதாகவும் கூறப்பட்டது.

வலிமை திரைப்படத்தில் சற்று எடை கூடி இருந்த அஜித்தை சோஷியல் மீடியாவில் பலரும் உருவ கேலி செய்தனர். அதன் காரணமாக இயக்குனர் இந்த படத்தில் அஜித்தை மிகவும் இளமையாக, ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் காட்டும் பொருட்டு அசத்தலாக கதையை ரெடி செய்து உள்ளார்.

அதற்கு சம்மதித்த அஜித்தும் தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக கேரளா வரை சென்று சில ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டார். அதன் பலனாக அவர் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக, இளமையாக மாறி இருக்கிறார்.

aadhi-ajith
aadhi-ajith

அந்த போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக இந்தப் படத்தில் நடிகர் ஆதியும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆதியும், அஜித்தும் இணைந்து இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.

அதில் அஜித் வெள்ளை நிற சட்டை அணிந்துகொண்டு தாடியுடன் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். அவருடைய இந்த தோற்றம் தற்போது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. மேலும் ஆதியும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகரித்துள்ளது.