புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நயன்தாராவிற்கு வலை விரித்த தோனி.. மர்ம முடிச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா நம்ம தல

மகேந்திர சிங் தோனி தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கி உள்ளார். மேலும் இந்நிறுவனம் முதலில் நயன்தாராவின் படத்தை தயாரிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. அதற்கு நயன்தாராவும் ஒப்புக்கொண்டார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்திக்கு தற்போது தோனி தரப்பிலிருந்து அறிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. முதலாவதாக தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சஞ்சய் என்பவரை வேலைக்கு அமர்த்தி உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உறுதிபட கூறியுள்ளனர்.

அதாவது சஞ்சய் என்பவர் ரஜினிகாந்திடம் பணிபுரிந்தவர், அவர் தற்போது தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் படத்தை தயாரிக்கலாம் என்று தோனிக்கு யோசனை சொன்னதாக செய்திகள் வெளியானது.

தற்போது சஞ்சய் என்ற பெயரில் நாங்கள் யாரையும் பணியமர்த்தவில்லை. அந்தப் பெயரில் வெளியாகும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் நாங்கள் படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

கண்டிப்பாக புதிய படத்தில் ஒப்பந்தமானால் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம் என கூறியுள்ளனர். அதுவரைக்கும் இணையத்தில் உலாவும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர். ஆனால் அந்த அறிக்கையில் நயன்தாரா குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனால் ஒருவேளை நயன்தாராதான் தோனி தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தில் நடிக்கவுள்ளாரோ என்ற சந்தேகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மர்ம  முடிச்சிக்கு தோனியால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாலே ரசிகர்களுக்கு தெளிவுபட தெரியும்.

Trending News