திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா.. காற்று போன பலூன் ஆன பாடகியின் கனவு

சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமாக இருப்பவர் அந்த பாடகி. ஒரு தனியார் சேனலின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட அவருக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதே சேனலில் ஒளிபரப்பாகி வரும் அந்த சமையல் ஷோவில் இவரின் சேட்டைகள் வெகு பிரபலம்.

இவருக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். இந்த புகழை வைத்து அந்த பாடகிக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதுவும் தற்போது சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருக்கும் அந்த நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் பாடகி ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து அலப்பரை செய்து வந்தார். மேலும் ஹீரோயின் ரேஞ்சுக்கு தன்னை நினைத்துக் கொண்டு படங்களில் புக் பண்ண வரும் இயக்குனர்களிடம் சம்பளம் போன்ற விஷயங்களில் கறார் காட்டியிருக்கிறார்.

முதல் படமே இன்னும் ரிலீசாகவில்லை அதற்குள் இவ்வளவு அலப்பறையா என்று பலரும் நினைத்த வேளையில் தற்போது அவர் நடித்த படம் வெளியாகியுள்ளது. வழக்கம்போல நடிகரை அனைவரும் பாராட்டி வந்த நிலையில் பாடகியின் நடிப்பை சிலர் கழுவி ஊற்றாத குறையாக பேசி வருகின்றனர்.

ஹீரோயினுக்கு பிரண்டாக நடித்திருக்கும் அவரின் நடிப்பை பார்த்த பலரும் உங்களுக்கு ஆக்டிங் செட்டாகாது, பாடுவதோடு நிறுத்திக்கங்க என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதனால் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.

Trending News