சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் தொடர்ந்து வெளியான துக்ளக், தர்பார், லாபம், குட்டி ஸ்டோரி, சங்கத்தமிழன், சிந்துபாத் உட்பட பல படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
அதனால் விஜய் சேதுபதியே பலரும் பல்வேறு விதமாக விமர்சனம் செய்து வந்தனர். ஏனென்றால் தமிழ் சினிமாவில் எங்கு பார்த்தாலும் இவர் முகம் தான் தெரியுமளவுக்கு வருடத்தில் 10 முதல் 15 திரைப்படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆகையால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலரும் விஜய் சேதுபதி கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறி வந்தனர். ஆனால் விஜய் சேதுபதி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பல படவாய்ப்புகளை பெற்று வருகிறார்.
ஹிந்தியில் தென்னிந்திய நடிகர்கள் நடிப்பது கஷ்டம். அதுவும் ஒரு படத்திற்கு மேல் அவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் போன்ற பேச்சுக்கள் சினிமாவில் வந்துள்ளன. ஆனால் தற்போது விஜய்சேதுபதி ஹிந்தியில் ஐந்து படங்கள் நடிக்க உள்ளார். இதனை பார்த்த ஹிந்தி நடிகர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.
‘காக்கிற மரத்துக்கு தான் கல்லடி’ என்கிறது போல விஜய் சேதுபதியின் வளர்ச்சி சினிமா பிரபலங்களை வாயடைக்கச் செய்கிறது. அத்துடன் விஜய் சேதுபதியை எந்த ராசி அவரைக் காப்பாற்றுதோ தெரியலை, இவருடைய எவ்வளவோ ப்ளாப் ஆனாலும், தொடர்ந்த எக்கச்சக்கமான பட வாய்ப்புகளை குவித்துக் கொண்டிருக்கிறார்
இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் ஒரு சில மலையாளப் படங்களும், மேரி கிறிஸ்மஸ் என்ற ஹிந்தி படமும், தமிழில் விக்ரம், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல், விடுதலை, மும்பைகார் போன்ற திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. அத்துடன் விஜய்சேதுபதிக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் விஜய்சேதுபதியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது விமர்சனங்கள் எல்லாம் அவரை எந்த விதத்திலும் பாதிக்காது என பெருமிதமாக கூறிவருகின்றனர்.