விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் விருவிருப்பு என்ற பெயரில் இவர்கள் செய்யும் அக்கப்போரு சின்னத்திரை ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது. ஏனென்றால் ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற படத்தின் கதையை அப்படியே சுட்டு அதில் வருவது போன்றே சக்தி என்றால் குழந்தைக்கு ஆயிஷா என்ற குழந்தையின் இதயத்தை மாற்றம் அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
சரியான நேரத்தில் அந்த இதயத்தை சக்திக்கு பொருத்த வேண்டும். அப்பொழுது இதயத்தைக் கொண்டு வரும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிக் கொள்வதால், மற்றொரு ஆம்புலன்சை சரியான நேரத்திற்கு கண்ணம்மா அந்த இடத்திற்கு கொண்டு வந்து இதயத்தை துரிதமாக கொண்டு செல்ல உதவுகிறது.
இதனால் ஒவ்வொரு விஷயத்திலும், கண்ணம்மா தான் இந்த சீரியலின் ஹீரோயின் என்பதால் அவளால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றனர்.
இதற்கு ஆயிஷாவை சக்தி இருக்கும் ஹாஸ்பிடலில் வரவைத்து ஒரே இடத்திலேயே இரண்டு அறுவை சிகிச்சையும் நடத்தி இருக்கலாமே என சீரியலில் லாஜிக் இடிக்கிறது என்று பாரதிகண்ணம்மா சீரியலை சோசியல் மீடியாவில் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சீரியலில் இயக்குனர் கதையையே மறந்து வேறொரு டிராக்கில் சென்று கொண்டிருக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர். ஏற்கனவே நடந்த படத்தின் கதையை அப்படியே மீண்டும் சீரியலில் கொண்டு வந்து பாரதிகண்ணம்மா சீரியலை ஒரு உருட்டு உருட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி இனிமேல் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்வதால் அவர்களுக்கிடையே ரொமான்ஸ் கூடுதலாக காண்பித்து இருவரும் ஒன்று சேர வாய்ப்பு வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், இப்படி சீரியலை சொதப்புவதால் நிச்சயம் இந்த வாரம் பாரதிகண்ணம்மா சீரியலில் டிஆர்பி சரியாக அடி வாங்கப் போகிறது.