வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஓடாத படத்துக்கு சக்சஸ் பார்ட்டி வைத்த நடிகை.. வெளிவந்த ராஜதந்திரம்

சமீபகாலமாக திரையுலகில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத படங்களுக்குக் கூட சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடுகின்றனர். படம் ரிலீசாகி தியேட்டரில் காத்து வாங்கினாலும் படம் பல கோடி வசூல் பெற்றுவிட்டதாக சம்பந்தப்பட்டவர்களே ஒரு வதந்தியை பரப்பி வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் தற்போது நடந்துள்ளது. சமீபத்தில் நம்பர் நடிகையின் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதை தெரிந்து தான் நடிகையே படத்துக்கு பெரிய பிரமோஷன் எதுவும் செய்து காசை வீணடிக்க வேண்டாம் என்று இருந்துவிட்டார்.

இந்நிலையில் நடிகை படம் ரிலீஸ் ஆன ஒரு வாரத்திலேயே சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். ஆனால் படம் வெளியான சில தினங்களிலேயே தியேட்டர்களில் காற்று வாங்கியது. அப்படியிருக்கும்போது நடிகை பார்ட்டி வைத்துக் கொண்டாடியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் இதற்குப் பின்னணியில் பலமான ஒரு காரணமும் இருக்கிறது. நடிகையின் காதலன் தற்போது அந்த டாப் நடிகரை வைத்து படம் இயக்க போகிறார். தற்போது படம் தோல்வி என்று தெரிந்தால் நடிகர் பின் வாங்கி விடுவார் என்ற பயத்தில்தான் நம்பர் நடிகை இப்படி செய்து வருகிறாராம்.

ஆனால் நடிகர் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் எக்காரணம் கொண்டும் அந்த முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார். அதனால் காதலர் நிச்சயமாக இந்த படத்தை இயக்கி வெற்றி பெற்று விடுவார் என்ற ஒரு நம்பிக்கையும் நடிகைக்கு இருக்கிறதாம். அப்புறம் எதற்காக இந்த ராஜதந்திரம் என்று நடிகையை பற்றி திரையுலகில் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News