சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னையில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய செய்தி காட்டுத்தீ போல் பரவியது. இதன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்பட்டாலும் “தோனி என்டர்டைன்மென்ட்ஸ்” என்ற பெயரில் தோனி தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது உண்மையே.
இந்நிலையில் அந்த நிறுவனம் விஜய், நயன்தாரா போன்ற பெரும்புள்ளிகளை குறி வைத்து படங்களை தயாரிக்க உள்ளது. அதன் சார்பாக சஞ்சய் என்ற நபர் இளையதளபதி விஜய்யிடம் பேசியதும், ஆனால் அவர் வரிசையாக நிறைய படங்கள் வைத்திருப்பதால் இப்பொழுது படம் பண்ண முடியாது என்று நிராகரித்த செய்தியும் வெளிவந்தது.
அதன்பின் நயன்தாராவிடம் படம் பண்ணுவதற்காக சஞ்சய் பேசினார் என்ற செய்தியும் பரவியது. விசாரித்துப் பார்த்தால் அது அனைத்தும் உண்மையே, தோனி என்டர்டெயின்மென்ட் சார்பாக சஞ்சய் என்ற நபர் பேசியுள்ளார். இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வந்தது.
அனால் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டது தோனி என்டர்டைன்மென்ட்ஸ். இந்த உண்மையான செய்தியை மறுத்து பேசியது தான் சினிமா வட்டாரத்தில் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
சரி விஷயத்துக்கு வருவோம் யாரிந்த சஞ்சய். இந்த நபர் தான் ரஜினி குடும்பத்திற்கு சகலமுகமாக இருந்துள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி, உடல் நலிவுற்ற போது அவருக்காக சிறுநீரகத்தை தானமாக கொடுத்து அவரை காப்பாற்றியுள்ளார். அதன் காரனமாகத்தான் இவர் ரஜினி குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய நபராக மாறியுள்ளார். ரஜினியின் அனைத்து சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளையும், குடும்பத்தினருக்கு தேவையானவற்றையும் செய்து கொடுத்து அந்த குடும்ப உறுப்பினராகவே மாறியுள்ளார்.
இப்பொழுது இவர் தோனி என்டர்டைமெண்ட் நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் சஞ்சய், ரஜினி குடும்பத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார் என்பது கூடுதல் செய்தி .