வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோப்ரா படத்திற்கு வந்த சோதனை.. வெளிநாட்டிலிருந்து பறந்து வந்த விக்ரம்

விக்ரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் நடித்திருந்தார். இதைதொடர்ந்து பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் மற்ற வேலைகள் எதுவும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.

இப்படத்தை இமைக்காநொடிகள், டிமான்டி காலனி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். கோப்ரா படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ளது. கோபுர படம் விக்ரம் மற்றும் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இன் மிரட்டலான நடிப்பில் வெளியாக உள்ளது.

மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி, கே எஸ் ரவிக்குமார், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் படத்தின் பட்ஜெட்டை விட அதிக செலவானதால் இயக்குனர், தயாரிப்பாளர் இடையே பிரச்சனை நிலவியது. அதன்பின் பிரச்சினை தீர்க்கப்பட்ட மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் விக்ரம் பாதி டப்பிங் பேசிய நிலையில் திடீரென வெளிநாட்டுக்கு சென்றுயுள்ளார். படக்குழுவுடன் விக்ரமுக்கு ஏதோ சில கருத்து வேறுபாடுகள் தான் விக்ரம் இவ்வாறு வெளிநாட்டிற்கு சென்றார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஒரு பக்கம் விக்ரம் ஓய்வெடுப்பதற்காக தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்த பல பிரச்சினைகளை சந்தித்த கோப்ரா படம் ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது விக்ரமால் பிரச்சனையை சந்தித்துள்ளது.

இந்நிலையில் படக்குழு விக்ரமுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தற்போது மீதமுள்ள டப்பிங் பேசுவதற்காக வெளிநாட்டில் இருந்து வருகிறார். இதனால் இப்படத்தின் இதர வேலைகளை விரைவாக முடித்து படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கோப்ரா பட குழு செயல்பட்டு வருகிறது.

Trending News