புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உண்மையை போட்டு உடைத்த ராதிகா.. கோபத்தில் கொந்தளித்த மூர்த்தி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்கள் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கோபி, ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை மூர்த்தி எதர்ச்சையாக பார்த்துவிடுகிறார்.

இதனால் மூர்த்தியும், தனமும் கோபியின் நடவடிக்கையில் சுத்தமாக சரியில்லை, ராதிகாவிடம் இருந்து தப்பிப்பதற்காக தான் இப்படி நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கின்றனர். மேலும், ஒருபக்கம் எழில் சோகமாக இருந்ததை பார்த்த கதிருக்கு உங்க அப்பாவுக்கு உனக்கும் என்ன சண்டை என்று கேட்கிறார்.

எழில் தன் அப்பாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது அதை தானே இரண்டு, மூன்று முறை பார்த்திருக்கிறேன். ஆனா நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேங்கிறார் என கதிரிடம் அழுகிறார். அதன் பிறகு எழிலுக்கு கதிர் ஆறுதல் சொல்லுகிறார்.

மேலும் எழில் சொன்ன விஷயங்களை கதிர் மூர்த்தி இடமும் பகிர்ந்து கொள்கிறார். இதனால் மூர்த்திக்கு சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. இதனால் தனம், மூர்த்தி இருவருமே ராதிகா வீட்டுக்கு செல்கின்றனர். அப்போது தனம் ராதிகாவிடம் உங்களை திருமணம் செய்து கொள்பவரின் போட்டோவை காட்டுங்கள் என கேட்கிறாள்.

உடனே ராதிகாவும் தன் மொபைல் போனில் உள்ள கோபி போட்டோவை காட்டுகிறார். இதைப்பார்த்த தனம், கோபி இருவருமே அதிர்ச்சி அடைகின்றனர். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஊருக்கு கிளம்புகிறது. அப்போது மூர்த்தி தனியாக கோபி ரூமுக்கு சென்று ராதிகா எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்க.

பாக்கியா தான் என் பொண்டாட்டினு ராதிகா கிட்ட சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா என அதிரடியான கேள்விகளால் கோபியை விளாசுகிறார் மூர்த்தி. ஆத்திரத்தில் கோபியும் திட்ட மூர்த்தி அடிக்க கை நீட்டுகிறார். ஆனால் சத்தத்தை கேட்டு மொத்த குடும்பமும் உடனே ரூமின் கதவை தட்டுகின்றனர். இதனால் இத்தொடரில் பல அதிரடி திருப்பங்கள் வர காத்திருக்கிறது.

Trending News