தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஜெயம் ரவி தற்போது ஒரு வெற்றிக்காக போராடி வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களை கவராத நிலையில் இவர் தற்போது தன் திறமையை வெளிக்காட்டும் அளவுக்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பதிவிட்ட கருத்து ஒன்று ரசிகர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது. அதாவது கடந்த 2009ஆம் ஆண்டு ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
பொதுவாக திரையில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். தற்போது நடிகர்களை தாண்டி அவர்களுடைய மனைவிகளும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.
அதில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் ஒருவர். சமீபத்தில் ஆர்த்தி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பொறாமை கொண்டவர்களை நமது அருகில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. அவர்கள் நம்மை ஒரு போட்டியாக மட்டும் தான் பார்ப்பார்கள்.
ஆனால் நாம் அவர்களை நண்பர்கள், குடும்பத்தினர் என்று பார்த்து அன்பு செலுத்துவோம் என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். இதை பார்க்கும் போது அவர் யாரைப் பற்றியோ மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆனால் அவர் தற்போது எதற்காக இப்படி ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார் என்றும், ஆர்த்திக்கு என்னதான் பிரச்சனை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவர் யாரைப் பற்றி சொல்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாமல் பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.