வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பின்வாசல் வழியாக ஓடிய சங்கர்.. அடுத்தடுத்து தொடர்ந்து வரும் பிரச்சனைகள்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் சங்கர். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 2.o திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை அடுத்து தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற அந்நியன் திரைப்படத்தை சங்கர் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் நேற்று மதியம் ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத் துறை சென்னை மண்டல அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்தார்.

சட்ட விரோத பண மாற்றம் தொடர்பான குற்றத்திற்காக அவர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அவரிடம் அதிகாரிகள் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பிறகு அது பற்றிய விவரங்களை அவர்கள் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்கள்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக இருக்கும் சங்கர் விசாரணைக்காக வந்ததை தெரிந்துக் கொண்ட பத்திரிக்கையாளர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர். இந்த விசாரணையை பற்றி பல கேள்விகளை எழுப்பிய ஊடகத்தினர் சங்கரை பேட்டி எடுப்பதற்கு முயற்சி செய்தனர்.

பத்திரிக்கையாளர்கள் கூடி விட்டதை தெரிந்து கொண்ட சங்கர் அமலாக்கத்துறை அலுவலகத்தின் பின்வாசல் வழியாக வாடகை காரில் ஏறி சென்றார். இதனால் பத்திரிக்கையாளர்கள் சங்கரை பேட்டி எடுக்க முடியாத ஏமாற்றத்தில் இருந்தனர்.

இருப்பினும் அமலாக்கத் துறையினர் இந்த வழக்கு தொடர்பாக சங்கரை மீண்டும் விசாரிக்க இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த வழக்கின் முழு காரணத்தையும் தெரிந்துகொள்ள ஊடகத்தினர் தற்போது மும்முரமான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில்தான் சங்கர் தன் மூத்த மகளுக்கு திருமணம் செய்து முடித்தார். ஆனால் அவருடைய மருமகன் ஒரு குற்றத்திற்காக போலீஸ் விசாரணையில் இருக்கிறார். அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே சங்கர் வீட்டில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News