புதன்கிழமை, நவம்பர் 27, 2024

மோடியை கணித்த மாதவன்.. ஒருவகையில இதுவும் உண்மைதான்

மாதவன் தற்போது ராக்கெட்டரி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த திரைப்படம் நேற்று நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதில் மாதவனின் நடிப்பு தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த விழாவில் நடிகர் மாதவன், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா முயற்சியை மிகவும் பாராட்டிப் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிரதமர் மோடி டிஜிட்டல் பொருளாதாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய போது அது பொருளாதார வல்லுனர்களால் இந்தியாவுக்கு பேரழிவு என்று கருதப்பட்டது.

குறிப்பாக பொது மக்களும் இந்த நடைமுறையை விரும்பவில்லை. மேலும் கிராம மக்கள், படிக்காதவர்கள், விவசாயிகள் போன்றவர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டிஜிட்டல் முறைகளை எப்படி தெரிந்து கொள்வார்கள் என்று கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது.

தற்போது இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது தற்போது பெருமை மிக்க தருணம் என்று புதிய இந்தியாவை உருவாக்கிய பிரதமரை நடிகர் மாதவன் பாராட்டிப் பேசியுள்ளார். இது ஒருவகையில் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விதத்திலும் இருக்கிறது.

தற்போது அனைத்து மக்களும் டிஜிட்டல் முறையை கையாள கற்றுத் தேர்ந்து உள்ளனர். அந்தவகையில் பேரழிவு என்று கருதப்பட்ட இந்த நடைமுறை தற்போது சாத்தியமாகியிருக்கிறது. மாதவன் கூறிய இந்த கருத்துக்கு தற்போது பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News