திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தீவிரவாதிகளுடன் பார்வதிக்கு இருக்கும் தொடர்பு.. மழுங்கி போயிருச்சா IPS சந்தியாவின் முளை!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் பல போராட்டத்திற்கு பிறகு பார்வதி-பாஸ்கர் திருமணம் நடந்து முடிந்த கையோடு, அடுத்த பிரச்சனை கிளம்பியிருக்கிறது. அதாவது வீட்டு வேலைக்காரி மயில் உடைய உறவினர் என சொல்லிக்கொள்ளும் ஒரு நபர் சரவணன் கடையில் வேலை பார்க்கிறான்.

அவன் தீவிரவாதியாக செயல்பட்டு கோயில் குண்டு வைக்கப் போவதைப் பற்றிய விபரத்தை பார்வதி தெரிந்து கொள்கிறாள். இதனால் அந்த தீவிரவாதி பார்வதியை தனி அறையில் அடைத்து வைத்து, அவள் மூலமே கோவிலில் குண்டு வைக்க திட்டமிடுகின்றனர்.

பார்வதியின் தொலைந்து போய் இரண்டு நாட்கள் ஆகிய நிலையில், சந்தியா-சரவணன் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அங்கு பார்வதியை கண்டுபிடித்து தரும்படி கம்ப்ளைன்ட் கொடுக்கின்றனர். அத்துடன் சந்தியா ஒரு பென்டிரை(pen drive)-வை போலீஸில் கொடுக்கிறாள்.

அதில் கட்டிப் போட்டிருக்கும் படி இருக்கும் புகைப்படம் மற்றும் கோயில் புகைப்படமும் இருக்கிறது. போலீசுக்கு ஏற்கனவே கோவிலில் குண்டு வெடிக்கப் போகிறதற்கால தகவல் தெரிந்து இருக்கும் நிலையில், பார்வதியையும் தீவிரவாதிகளையும் தொடர்புப்படுத்துகின்றனர்.

எனவே தீவிரவாதிகள்தான் பார்வதியை கடத்தி வைத்து கோயில் நடக்கப்போகும் குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்த போகின்றனர். இதனால் பார்வதியை காப்பாற்றுவது எப்படி என தெரியாமல் அவர்களது குடும்பமும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இந்த சீரியலில் சந்தியாவாக ஆலியா நடித்துக் கொண்டிருக்கும் வரையில் சீரியல் கூடுதல் வெறும் விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் சென்றது. ஆனால் சந்தியா கதாபாத்திரத்தை மாற்றிய பிறகு புதிதாக நடித்துக்கொண்டிருக்கும் ரியா சந்தியா கதாபாத்திற்கு சுத்தமாகவே செட்டாகவில்லை.

ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியாவிற்கு தற்போது மூளை மழுங்கி விட்டதா என்றும் இந்த சீரியலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

Trending News