தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் பிரபலமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவருக்காக எதையும் செய்யும் அளவுக்கு இவரின் மீது தீராத பற்றுக் கொண்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதுதான் அவர் இன்று சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பதற்கு முக்கிய காரணம். அப்படிப்பட்ட இந்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரிடம் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்த ரஜினி சில வருடங்களுக்கு முன் அரசியலுக்கு வருவேன் என்று உறுதி அளித்தார்.
பல ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த பதிலைக் கூறிய ரஜினிகாந்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் சில மாதங்களிலேயே ரஜினி இனி எப்போதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார்.
இது அவரை நம்பி இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பல ரசிகர்களும் அவரிடம் ஏன் இப்படி ஒரு முடிவு என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். ஆனாலும் ரஜினி அவருடைய முடிவில் உறுதியாக இருந்தார்.
அதன் பிறகு அந்த சலசலப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க தொடங்கியது. ஒருவிதத்தில் அவருடைய அந்த முடிவை பலரும் வரவேற்க தான் செய்தனர். ஏனென்றால் அந்த சமயத்தில் ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக பல சர்ச்சைகள் எழுந்து.
இதுவே அவரின் மீதி இருக்கும் நன் மதிப்பை குறைக்கும் வகையிலும் இருந்தது. அதன் பிறகு அவர் அரசியல் வேண்டாம் என்று எடுத்த முடிவால் ரசிகர்கள் கவலையில் இருந்தாலும், பொதுமக்கள் பலரும் அவருடைய இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் அந்த முடிவுக்கு பின்னர் அவருக்கு இருக்கும் நன்மதிப்பு மக்கள் மத்தியில் இன்னும் அதிகமானது என்று தான் சொல்ல வேண்டும்.