ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சுயநலமாக நடந்து கொள்ளும் நயன்தாரா.. தக்க பதிலடி கொடுப்பார்களா தயாரிப்பாளர்கள்?

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சோலோ ஹீரோயினாக நடித்து வரும் இவருக்கு தற்போது நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அதனால் தற்போது இவர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் மட்டுமல்லாமல் அவர் தயாரிப்பில் வெளியாகும் மற்ற படங்களும் இவருக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வருகிறது.

தற்போது இந்த விஷயம் தான் நயன்தாரா மீது சில சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக நயன்தாரா நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டார். அது எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் அவர் அதில் கலந்து கொள்ள மாட்டார்.

இது திரையுலகில் ஒரு சர்ச்சையாக பார்க்கப்பட்டாலும் அவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நயன்தாரா தன் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு மட்டும் பிரமோஷன் செய்ய வருகிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

அதுவும் தன் காதலரின் படம் என்றால் மட்டும் அவர் புரமோஷனுக்கு வந்துவிடுகிறார் மற்ற தயாரிப்பாளரின் படங்கள் என்றால் வருவதில்லை. இப்படி சுயநலமாக நடந்து கொள்ளும் நயன்தாராவை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இனிவரும் காலங்களிலாவது நயன்தாரா மற்ற தயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்கு பிரமோஷன் செய்வாரா என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது நயன்தாராவை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் அவரிடம் பட புரமோஷனுக்கு கட்டாயம் வரவேண்டும் என்ற ஒரு நிபந்தனையையும் விதிக்க இருக்கின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் நயன்தாரா சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறிதான். அப்படி அவர் வராத பட்சத்தில் தயாரிப்பாளர்கள் அவருக்கான பட வாய்ப்பை மறுத்தால் ஒருவேளை அவர் பிரமோஷனில் கலந்துகொள்ள சம்பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தயாரிப்பாளர்கள், நயன்தாராவின் இந்த சுயநலமான போக்குக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே திரையுலகில் பலரின் கருத்தாக இருக்கிறது.

Trending News