சமீபகாலமாக திரைத்துறையில் இருக்கும் நடிகைகளுக்கு பாலியல் சம்பந்தப்பட்ட தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இந்த கொடுமை திரைத்துறையில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளில் இருக்கும் பெண்களும் அனுபவித்து வருகின்றனர்.
இந்த விஷயங்களை பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் பொது வெளியில் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதன் மூலம் ஜென்டில்மேன் வேஷம் போட்டு வரும் பலரின் முகத்திரையை கிழிக்கப்பட்டு வருகிறது. இதில் லேட்டஸ்டாக சின்னத்திரை நடிகைக்கு நேர்ந்த ஒரு பாலியல் தொல்லை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பிரபல சேனல் ஒன்றின் சீரியலில் நாயகியாக நடித்து வரும் அந்த இளம் நடிகைக்கு சில வருடங்களுக்கு முன்பு பெரிய திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக நடிகையை அணுகிய ஒரு பிரபலம் அவரை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யச் சொல்லி கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ந்து போன நடிகையின் குடும்பம் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று உதறித் தள்ளி இருக்கிறது. ஆனாலும் விடாத அந்த பிரபலம் நடிகைக்கு விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை, அவரின் அம்மாவாக இருந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன அந்த நடிகையும் அவரின் அம்மாவும் விட்டால் போதும் என்று அந்த இடத்தை காலி செய்துள்ளனர். இந்த விஷயத்தை தற்போது நடிகை பொதுவெளியில் கூறியுள்ளார்.
இப்படி வக்கிரம் பிடித்த மனிதர்களுக்கு இடையில் வாழும் பெண்களின் அவல நிலைக்கு எப்போது விடிவு காலம் பிறக்குமோ தெரியவில்லை. தற்போது நடிகைக்கும், அவருடைய அம்மாவுக்கும் நடந்த இந்த பாலியல் தொல்லை சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.