புது புது பிரச்சினைகளில் சிக்கும் ஷங்கர்.. நிம்மதியை தொலைத்து பரிதவிக்கும் பரிதாபம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வந்த இயக்குனர் ஷங்கருக்கு தற்போது நேரமே சரியில்லை போல. எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு பிரச்சனை அவரை தேடி வந்து விடுகிறது. சமீபத்தில் அவருடைய மருமகன் மீது போக்சோ சட்டம் இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் சங்கடத்தில் இருக்கிறார்.

இதனால் பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக நடக்க இருந்த அவருடைய மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கூட அவர் ரத்து செய்துவிட்டார். இந்நிலையில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கும் தற்போது இழுபறியில் இருக்கிறது. இதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கொஞ்சம் பண பிரச்சினையில் இருந்து வருவதாக தெரிகிறது. தற்போது அவர் விஜய் நடித்துவரும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

அந்த திரைப்படமும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஷங்கர், ராஜமௌலியை ஓவர்டேக் செய்யும் வகையில் ஏகப்பட்ட செலவுகளை தயாரிப்பாளருக்கு இழுத்து விட்டதாக தெரிகிறது. அதனால் தற்போது படத்தின் ஷூட்டிங் காலதாமதம் ஆகிறது.

அதுமட்டுமின்றி சங்கர் 2.o திரைப்படத்தின் போது சில பண பரிவர்த்தனைகள் முறைகேடாக செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதற்காக அமலாக்கத்துறை பிரிவினர் சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அது தொடர்பான டாக்குமெண்ட்ஸ் அனைத்தும் ஷங்கர் தரப்பில் இருந்து சரியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அமலாக்கத் துறையினர் சங்கரை எப்போது வேண்டுமானாலும் மறு விசாரணைக்கு கூப்பிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி எல்லா பக்கமும் பிரச்சனையாக இருப்பதால் சங்கர் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த கலக்கத்தில் இருக்கிறார்.