திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

உலக அளவில் அதிக வசூல் படைத்த 5 ஹாலிவுட் படங்கள்.. 13 வருடங்களாக முதலிடத்தில் இருக்கும் அவதார்

ஹாலிவுட்டில் வெளியாகும் படங்களுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால்தான் அந்தப் படங்கள் பெரும்பாலும் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்படுகிறது. அவ்வாறு அதிக வசூல் வேட்டையாடிய 5 ஹாலிவுட் படங்களை பார்க்கலாம்.

அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் : ஆண்டனி மற்றும் ஜோ ருஸ்ஸோ ஆகியோர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. இது தி அவெஞ்சர்ஸ் மற்றும் அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படங்களின் தொடர்ச்சியாகும். இப்படம் உலகம் முழுவதும் 15000 கோடி வசூலை ஈட்டியது.

ஸ்டார் வார்ஸ் – தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் : ஜே ஜே ஆப்ராம்ஸ் எழுதி, இயக்கி, இணைந்து தயாரித்த படம் ஸ்டார் வார்ஸ். ஜார்ஜ் லூகாஸ் உருவாக்கிய ஸ்டார் வார்ஸ் உலகம் இப்போதும் பல கோடிகள் லாபத்தை பார்த்தது. இதில் தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் 2015 இல் வெளியாகி 16000 கோடி லாபத்தை அடைந்தது.

டைட்டானிக் : ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு உணர்ச்சிகரமான காதல் கதையாக வெளியான திரைப்படம் டைட்டானிக். இப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகியும் வசூலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மீண்டும் இது போன்ற திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் 17000 வசூலை பெற்றது.

அவெஞ்சர்ஸ் – என்ட்கேம் : அவெஞ்சர்ஸ் சீரிஸின் மூன்றாவது பாகமாக வெளியானது என்ட்கேம். இப்படத்தில் அயன் மேன் இறந்துவிடுவார் என படத்தின் வெளியீட்டுக்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படம் 21000 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்தது.

அவதார் : டைட்டானிக் படத்தின் சாதனையை எந்த படமும் முறியடிக்க முடியாத நிலையில் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் 2009இல் முறியடித்தது. மேலும் 22000 கோடி வசூல் செய்த உலகளாவிய அளவில் முதலிடத்தை பிடித்தது. மேலும் தற்போது வரை அவதார் படமே முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக உள்ளதால் இப்படத்தின் வசூலை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது .

- Advertisement -spot_img

Trending News