புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சந்தியா.. இந்த மாதிரி ட்விஸ்ட்டை நம்ம பார்த்ததே இல்ல பாரு

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சரவணனின் கடையில் வேலைக்கு சேர்ந்த செல்வம் தீவிரவாதியாக இருந்து அங்கிருக்கும் கோயிலுக்கு குண்டு வைத்து ஊர் மக்களையும் அந்தக் கோயிலையும் தகர்க்க பார்க்கிறான். இந்த விஷயத்தை சரவணனின் தங்கை பார்வதி தெரிந்து கொண்டதால் அவளையும் கடத்தி வைத்திருக்கிறான்.

பார்வதியை காப்பாற்ற வேண்டும், கோயிலில் குண்டு வைத்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக சந்தியா தன்னுடைய போலீஸ் மூளையை பயன்படுத்தி துப்புத் துலக்கிறாள். இதனால் அந்த தெருவில் இருக்கும் அனைவரின் ஆதார் கார்டு மற்றும் முகவரி அனைத்தையும் சரிபார்ப்பதற்காக சந்தேகம் ஏற்படும் நபர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் செல்வன் தான் அந்த தீவிரவாதி என 50 சதவீதம் உறுதியான பிறகு, சந்தியா போலீசாரின் உறுதுணையுடன் வலை விரிக்கிறார். அதாவது காணாமல் போன பார்வதி கிடைத்து விட்டதாகவும், அவள் மயக்க நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் செல்வம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போதே இதையெல்லாம் அவன் முன்பே சந்தியா சொல்கிறாள்.

பார்வதி தன்னை பற்றிய உண்மையை உளறி விடுவாள் என்பதை மனதில் வைத்து, செல்வம் அந்த மருத்துவமனைக்கு சென்று டாக்டர் போல் வேஷமிட்டு பார்வதியை கொல்ல முயற்சிக்கிறான். அங்கு படுத்து இருக்கும் நபர் பார்வதி அல்ல போலீஸ். போலி டாக்டராக வந்திருந்த செல்வத்தை கையும் களவுமாக பிடித்த சந்தியா போலீஸாரின் உதவியுடன் சுற்றி மடக்குகிறாள்.

ஆனால் தீவிரவாதியான செல்வம் கையில் இருந்த தீயணைப்பான் வைத்து, புகையை வரவைத்து அங்கிருக்கும் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்து விடுகிறான். இதன்பிறகு தீவிரவாதிகளின் பகைமையை சம்பாதித்துக் கொண்ட சந்தியா எப்படியாவது அவர்களை பிடிப்பதற்காக போலீஸுடன் சேர்ந்த தன்னுடைய ஈடுபாட்டையும் அளிப்பாள்.

ஆனால் இதெல்லாம் எத்தனையோ படத்திலேயே பார்த்துட்டோமே என, இந்த விறுவிறுப்பான கட்டத்தை கூட ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்க விரும்பவில்லை. மேலும் ஆலியா மானசா சந்தியாவாக நடித்தபோது இருந்த கதையின் விருவிருப்பு இப்பொழுது இல்லை என ராஜா ராணி2 சீரியல் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Trending News