தொடர்கதையாகும் விஷாலின் ஏமாற்று வேலை.. ஒத்து ஊதும் தயாரிப்பாளர் சங்கம்

நடிக்கும் படங்களில் இயக்குனர்களுடன் வாக்குவாதம், பணமோசடி வழக்கு என தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஷால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வீட்டிற்கும் கடந்த சில வருடங்களாகவே நடந்து கொண்டிருக்கிறார். இதற்கு இடையில் தற்போது மீண்டும் விஷாலின் ஏமாற்று வேலையை அம்பலப்படுத்தும் அளவிற்கு ஒரு சம்பவம் வெடித்திருக்கிறது.

அதாவது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாலு அவர்களிடம், விஷால் மற்றும் கௌதம் மேனன் இருவருக்கும் ஒரு படத்தில் நடித்து கொடுப்பதற்காக முன்பணமாக வாங்கி உள்ளனர். விஷாலுக்கு 4 கோடி மற்றும் கௌதம் மேனனுக்கு 4 கோடி என தனித்தனியாக இருந்தாலும் மகேந்திர இருவருக்கும் முன்பணமாக கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு K. பாலு இறந்த பிறகு, அந்த பணத்தை திருப்பித் தருமாறு பாலுவின் மனைவி விஷாலையும் கௌதம் மேனன் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர். இருவரும் சரிவர பதில் அளிக்காததால் உடனே அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இருவரையும் விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் எப்பொழுது பணம் தருவீர்கள் என அந்தப் புகாரின் பேரில் விளக்கம் கேட்டனர். உடனே கௌதம்மேனன் வாங்கிய 4 கோடி பணத்தை ஒரு மாதத்தில் திருப்பித் தருகிறேன் என சொல்லிவிட்டார் ஆனால் விஷால் நேரில் வராமல் வேறு ஆட்களை அனுப்பி பணம் தராமல் ஏமாற்றி வருகிறார்.

இதற்காக அவர் நேரில் ஆஜராகாமல் இருந்தது மட்டுமல்லாமல் சரியான பதிலும் அவர் தரப்பிலிருந்து தரவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் விஷாலுக்கு சாதகமாகவே தயாரிப்பாளர் சங்கம் நடந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

நேரில் ஆஜராகததற்கும், விளக்கம் அளிக்காததற்கும் காரணம் விஷால் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என்று தயாரிப்பு சங்கமும் உண்மையை மறைத்து விஷாலுடன் சேர்ந்து ஏமாற்றி வருகின்றனர். இப்படி விஷாலின் ஏமாற்று வேலை தொடர்கதை ஆகிறது மட்டுமல்லாமல் தயாரிப்பு சங்கமும் அவருடன் சேர்ந்து கொண்டு அநியாயத்திற்கு சாதகமாக நடப்பது வியப்பளிக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →