விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் சென்று வருகிறது. இத்தொடரில் வெண்பாவை பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது. எப்படியாவது இந்த மாப்பிள்ளையே ஓட ஓட விரட்ட வேண்டும் என வெண்பா ஒரு திட்டம் போட்டுள்ளார்.
அதாவது சாந்தியை தனக்கு போன் செய்து ஆண் நண்பருடன் பேசுவது போல வெண்பா டிராமா போடுகிறார். மேலும் அந்த மாப்பிள்ளையிடம் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என ஏகப்பட்ட கட்டுக்கதைகள் விடுகிறார். இதைக் கேட்ட மாப்பிள்ளை அவரது குடும்பத்துடன் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
இதையெல்லாம் அறியாத ரேகா ஏன் இப்படிப் மாப்பிள்ளை வீட்டார் போகிறார்கள் என வெண்பாவிடம் கேட்கிறார். உண்மையை சொன்னேன் என வெண்பா திமிராக பேசி போகிறார். இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ரேகா மற்றொரு மாப்பிள்ளையைத் தேடி வருகிறார். மறுபக்கம் பாரதி சிகிச்சை செய்த சக்தி கண்விழித்துப் பார்க்கிறாள். அப்போது பாரதி, கண்ணம்மா இருவருக்கும் நன்றி சொல்கிறார்.
மேலும் உயிரிழந்த ஆயிஷாவின் பெற்றோரும் சக்தியை பார்க்க மருத்துவமனைக்கு வருகின்றனர். சக்தியின் அப்பா இனி இவர்களும் உனக்கு பெற்றோர்கள் என கூறுகிறார். உடனே அவர்களையும் சக்தி அப்பா, அம்மா என்று அழைக்கிறார். அந்த காட்சிகளில் உணர்ச்சிகரமாக ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரச் செய்கிறது.
இந்நிலையில் வெண்பா இன்னும் எத்தனை மாப்பிள்ளை வந்தாலும் ஓட ஓட விரட்டுவேன், நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா பாரதிய தான் பண்ணிப்பேன் என சாந்தியிடம் கூறுகிறார். ரேகா வந்தவுடன் வெண்பா சோகமாக இருப்பது போல் நடிக்க, உனக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் நாளைக்கு வராங்க எனக் கூறுகிறார்.
ஆனா இந்த வீட்ல வேணாம் வாஸ்து சரியில்லை, ஹோட்டல்ல வைத்து பொண்ணு பார்க்க வராங்க எனக் கூறுகிறார். உடனே வெண்பா கோபப்பட்ட உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை நானே மாப்பிள்ளை பார்த்துக்கிறேன் என கூறுகிறார். உனக்கு ஆயிரம் மாப்பிள்ளை பார்த்தாலும் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை என ரேகா கூறுகிறார். எப்படியாவது வெண்பாவிற்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என உறுதியுடன் உள்ளார்.