வச்சு செய்றது வேற, வர வச்சு செய்றது வேற.. பிரதமர் மோடியை கடுப்பாக்கிய ஸ்டாலின்

சென்னைக்கு 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவிற்காக வந்த பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பை விட தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பால் பாஜகவினர் காண்டாகி உள்ளனர்.

திமுக ஆட்சி அமைத்ததற்கு பின் முதன்முறையாக பிரதமர் மோடி சென்னையில் வருகை தந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி வழிநெடுகிலும் பாஜகவினர் குவிந்து பட்டாசுகளை வெடித்து வரவேற்றனர்.

இதனிடையே நேரு உள்விளையாட்டு அரங்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரதமர் மோடியை வரவேற்று பேசுகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று உரையைத் தொடங்கினார். உடனே அரங்கமே கரகோஷத்தால் அதிர்ந்தது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கும் மேலாக கை தட்டல்களும் கூச்சலும் குறையவில்லை. இதனால் பாஜகவினர் சற்று கான்டாகினர். மேலும் இதனை மேடையிலிருந்து பிரதமர் மோடி அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேடையில் பேசினார். அப்போது பிரதமரை வரவேற்று, பின் தமிழக அரசின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முக்கியமாக நீட்தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பது குறித்து மத்திய அரசு துரிதமாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மேடையிலேயே வலியுறுத்தினார்.

மேலும் பிரதமர் மோடியின் கலங்கரை விளக்கம் வீடு திட்டத்திற்காக பெண்களுக்கு சான்றிதழை கொடுத்தபோது, மு.க.ஸ்டாலின் தள்ளியிருந்தார். உடனே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கையை பிரதமர் மோடி பிடித்து இழுத்து அந்த நிகழ்வில் பங்கேற்க வைத்தார்.

இதனிடையே பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது தமிழக முதல்வர் அவரை புகழ்ந்து பேசுவதை விட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தியதால் பாஜகவினர் தொடர் விவாதப்பொருளாக மாற்றி உள்ளனர். மேலும் இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், பிரதமர் மோடி தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு சரியான பதில் கொடுத்திருந்தால் மேடையில் கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.