புதன்கிழமை, ஜனவரி 15, 2025

50 வயதில் காதல் தோல்வி.. வசமாக சிக்கி தவிக்கும் கோபி அங்கிள்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்திற்கு தெரியாமல் கல்லூரி காதலியுடன் சந்தோசமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த கோபி, மகா சங்கமத்தின் போது வீட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினால் சிக்கி சின்னாபின்னமாகிட்டான்.

ஏனென்றால் கோபியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் மூர்த்தி-தனம் இருவரும் கோபிக்கும் ராதிகாவிற்கும் இடையே இருக்கும் தகாத உறவை கண்டுபிடித்து, அதை பாக்கியா வீட்டில் சொல்ல முடியாமல் ராதிகாவிடம் மட்டும் நாசூக்காக கோபியை போட்டு கொடுத்துவிட்டனர்.

இதனால் சந்தேகத்தின் உச்சத்துக்கே சென்ற ராதிகா, கோபியின் குடும்பத்தை பார்த்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் கோபி ராதிகாவின் மீதும், தன்னுடைய குடும்பத்தினரிடமும் கோபமாகவே நடந்துகொள்கிறான்.

ராதிகா தன்னைவிட்டு சென்றுவிடக்கூடாது, ராதிகா வேண்டும் என்பதற்காகவே பொய் பித்தலாட்டம் அனைத்தையும் செய்த கோபி, தற்போது மூர்த்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ராதிகா இப்படியெல்லாம் நடந்து கொள்வது அவனை குடிப்பழக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

கட்டின பொண்டாட்டி குடும்பத்தை எல்லாம் மறந்து தன்னுடைய மன நிம்மதிக்காக ராதிகாவின் உறவை தேர்ந்தெடுத்த கோபி, கடைசியில் ராதிகாவே தன்னை சந்தேகப்படுவதால் தனக்குத்தானே உளறிக்கொண்டு அரை மெண்டல் ஆகவே மாறி விட்டான்.

ஒருபக்கம் பாக்யா மற்றொரு பக்கம் ராதிகா என இரண்டு பேரும் படுத்துவதால், ஒரேடியா செத்துரலாம் போல என விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டான் போகிற போக்கில் ராதிகாவை நினைத்தே குடித்து குடித்து தேவதாஸ் ஆகவே கோபி மாறிவிடுவான் போல தெரிகிறது

Trending News