புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இணையத்தில் கசிந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்.. கல்யாணம் திருப்பதியில் இல்லையாம்

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தின் போது இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் பல வருடங்களாக இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

நயன்தாரா தன் பட வேலைகளில் படு பிசியாக இருந்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நயன்தாராவிடம் திருமணத்தை பற்றிய கேள்வியை தொகுப்பாளினி டிடி கேட்டார்.

அப்போது தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மோதிரத்தை காண்பித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் நயன்தாரா. இந்நிலையில் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்கில் இரண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.

இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஜூன் 9ஆம் தேதி இவர்களுக்கு திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதன் பிறகு இவர்கள் இருவரும் அடிக்கடி கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் லீக்காகி உள்ளது. அதாவது அந்த அழைப்பிதழில் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களது திருமணத்திற்கு திரைத்துறை சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்வதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானால் மட்டுமே இந்தச் செய்தி உண்மையா என்பது தெரியவரும்.

 nayanthara vignesh shivan wedding invitatio
nayanthara vignesh shivan wedding invitation

Trending News