வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

டாக்டருக்கு செம டோஸ் கொடுத்த கண்ணம்மா.. எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுத்தா எப்படி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக பிரிந்து வாழும் கணவன் மனைவி இருவரும் தற்போது ஒரே மருத்துவமனையில் மருத்துவராகவும், அட்மின் ஆபீசர் ஆகவும் வேலை பார்க்கின்றனர். பாரதி,  கண்ணம்மா தன்னுடைய மருத்துவமனையில் வேலை பார்ப்பதற்கு முழு காரணம் தனது அம்மா தான். இருவரையும் சேர்த்து வைப்பதற்காக இப்படி செய்கிறாரா என யோசித்து அந்த கோபத்தை தற்போது கண்ணம்மாவிடம் காட்டுகிறான்.

ஆனால் இதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காத கண்ணம்மா, பாரதி பேச தொடங்குவதற்கு முன்பே மருத்துவமனையில் ஒரு ஊழியராக மட்டுமே என்னிடம் பேசுங்கள். தனிப்பட்ட எந்த விஷயத்தையும் என்னிடம் பேசாதீர்கள் என கறாராக பேசுகிறாள்.

இருப்பினும் டாக்டராக இருந்து கொண்டு மனைவி மீது சந்தேகப்படும் பாரதி, ஒரு டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய மனைவியிடம் தவறு இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளாத நிலையில், தேவையில்லாமல் கண்ணம்மாவை திட்டுவதால் சின்னத்திரை ரசிகர்களிடம் பெரிதும் விமர்சிக்கப்படுகிறான்.

ஓட்ட ரெக்கார்டு ரிப்பேர் ஆனது போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி கண்ணம்மாவை பணத்தைக் கொடுத்து கிளம்ப சொல்கிறான். தேவை இல்லாமல் சண்டை சச்சரவு செய்துகொண்டு, திட்டுவது கோபப்படுவது என இருவரும் ஒரே இடத்தில் இப்படி இருப்பதைவிட இரண்டு பேரும் நல்லவிதமாகவே பிரிந்து விடலாம்

நான் இருக்கிற இடத்தில் நீ வேலை செய்வதைவிட, நீயும் உனது மகளும் நன்றாக வாழ்வதற்கு என்ன பணம் காசு தேவையோ, அதை நான் தந்து விடுகிறேன் என்று கண்ணம்மா செய்த தவறை வெளியில் சொல்ல மாட்டேன் என கண்டபடி பேசி மறுபடியும் கண்ணம்மாவை கடுப்பேற்றுகிறான்.

ஒரு நேரம் கண்ணம்மா என்ன திட்டினாலும் அதை அமைதியாக ஊமை போல் கேட்பதும், அதன் பிறகு டேப்பர் கார்டுக்கு சுவிட்சை போட்டார் போல் திடீரென கோபப்பட்டு பேசிய பிறகு மறுபடியும் அதே ரியாக்ஷன் கொடுப்பது என எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரி ரியாக்சன் கொடுத்து சீரியலைப் பார்ப்போரை வெறுப்பேற்றிகிறான்.

Trending News