80 காலகட்ட தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் அந்த நடிகை. சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே அவர் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஆனால் சில வருடங்களிலேயே அந்த திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து மகளுடன் தனித்து விடப்பட்ட அவருக்கு மனதளவிலும், உடலளவிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு பக்கபலமாக இருந்தார் அந்த முன்னணி நடிகர். நடிகை ஏற்கனவே அவருடன் பல திரைப்படங்களில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பிரபலமானவர்.
அதன்பிறகு நடிகைக்கு ஆதரவாக இருந்த நடிகர் அவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்தார். சில காலங்கள் சென்ற நிலையில் திடீரென நடிகை, அந்த நடிகரை பிரிய போவதாக ஊடகங்களுக்கு அறிவித்தார். இது பல சர்ச்சையை கிளப்பினாலும், இது எப்போதோ எதிர்பார்த்தது தான் என்று பலரும் இந்த விஷயத்தை கடந்து போய் விட்டனர்.
தற்போது தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் அந்த நடிகை மகளை திரையுலகில் அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி இருக்கிறார். அதற்காக தன் வாரிசுக்கு அவர் ஏகப்பட்ட பயிற்சிகளை கொடுத்து வருகிறாராம். தற்போது பிரபலமாக இருக்கும் அந்த வாரிசு நடிகரின் திரைப்படத்தில் மகளை கலக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
நடிகருடைய பிரிவிற்கு பிறகு பொது வெளியில் அதிகம் தென்படாமல் இருந்த நடிகை தற்போது முழுவீச்சில் களம் இறங்கியது அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்கு தானாம். தற்போது நடிகரின் மகள்களும் திரையுலகில் பிரபலமாக இருக்கின்றனர்.
அதேபோன்று தன் மகளையும் அவர்களுக்கு போட்டியாக முன்னணி இடத்திற்கு கொண்டு வருவதே தன்னுடைய லட்சியம் என்று நடிகை பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். இதைப் பற்றிதான் தற்போது கோலிவுட்டில் ஒரே பேச்சாக கிடக்கிறது.