வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அப்பாவை மதிக்காமல் செய்யும் வேலை.. 2 மகள்களாலும் நிம்மதியைத் தொலைத்த ஷங்கர்!

சினிமா துறையில் பிரம்மாண்ட இயக்குனரான திகழும் ஷங்கர் படங்கள் என்றாலே அதற்கு ரசிகர்களிடையே தனி மவுசு. ஏனென்றால் இவர் எடுக்கும் படங்களில் தொழில்நுட்ப மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைக்கிறது. அப்படிப்பட்ட பிரபலமான இயக்குனர் ஷங்கர் சமீபகாலமாக பல பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்.

தனது மூத்த மகள் கல்யாணத்திலே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்து விட்டார். பல கோடிகள் செலவு செய்து அந்த கல்யாணம் நின்றது. அந்த மன கஷ்டத்தில் இருந்து மீள முடியாத ஷங்கருக்கு இப்பொழுது தனது இரண்டாவது மகனான அதிதி ஷங்கரால் அவருக்கு தலைவலி ஆரம்பித்துள்ளது.

அதிதி ஷங்கருக்கு சினிமாவில் நடிப்பது என்பது கனவாக இருந்ததால் இதனை அப்பாவிடம் சொல்லப் போக, அவரும் அதிதிக்கு உறுதுணையாக நின்று ஒரு படத்தில் மட்டும் நடித்து ஆசையை தீர்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் எக்கச்சக்கமான போட்டோ ஷூட் அதிதிக்கு நடத்தப்பட்டது.

அதன் காரணமாக எம் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘விருமன்’ படத்தில் கார்த்தியுடன் நடித்து முடித்துள்ளார் அதிதி. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. விருமன்படம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி ரிலீஸாகிறது.

விருமன் படத்தை தொடர்ந்து இன்னும் நான்கு படங்களில் கமிட்டாகி உள்ளாராம் அதிதி. இந்த விஷயங்கள் எதுவுமே ஷங்கருக்கு தெரியாதாம். அவர் ஒரு படம் நடிப்பதற்கு மட்டுமே அனுமதி கொடுத்தார். ஆனால் அவர் நான்கு படங்களில் நடிக்கவிருப்பது ஷங்கருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

இதனால் மகள்களால் அவருக்கு நிம்மதி இல்லை என்று தெரிய வருகிறது. குறிப்பாக  அப்பாவின் தலையிலேயே ஏறி மிளகாய் அரைக்கிற அதிதி, அப்பாவை மதிக்காமல் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கின்ற விஷயம் ஷங்கருக்கு தெரிய வருவதால் அவர் பெரும் மன வருத்தத்தில் உள்ளார்.

Trending News